Connect with us

எல்லாம் உன் காலம் நடத்து நடத்து!.. விமான நிலையத்தில் ரஜினியால் சிவாஜிக்கு நடந்த சம்பவம்!..

raijnikanth sivaji ganesan

Cinema History

எல்லாம் உன் காலம் நடத்து நடத்து!.. விமான நிலையத்தில் ரஜினியால் சிவாஜிக்கு நடந்த சம்பவம்!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனும் எம்.ஜி.ஆரும் பெரும் ஆதிக்கம் செலுத்திய பிறகு அடுத்த தலைமுறைகளுக்கான கதாநாயகர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் களமிறங்கினர்.

கமல்ஹாசன் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல வகையான திரைப்படங்களை நடித்தார். கிட்டத்தட்ட சிவாஜிகணேசன் போலவே இவரும் எல்லா கதாபாத்திரங்களிலும் நடிப்பவராக இருந்தார். ஆனால் ரஜினிகாந்த் எம்.ஜி.ஆரை பின்தொடர்ந்து எம்.ஜி.ஆரை போலவே அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் கதாநாயகனாக உருவானார்.

இதனால் எம்.ஜி.ஆருக்கு எப்படி ஒரு ரசிகர் கூட்டம் உருவானதோ, அதேபோல ரஜினிகாந்திற்கும் மிகப்பெரிய ரசிக கூட்டம் உருவானது. நாளடைவில் சிவாஜி கணேசன் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பவராக மாறிப் போனார்.

அந்த சமயத்தில் படிக்காதவன் திரைப்படத்தில் ரஜினிகாந்த் சிவாஜி கணேசன் இருவரும் சேர்ந்து நடித்த அந்த சமயத்தில் ஒருமுறை படப்பிடிப்பிற்காக இருவரும் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த பொழுது ஒரு பெரிய கூட்டம் அவர்களுக்காக காத்திருந்தது.

அந்த ரசிகர் கூட்டம் அருகில் சிவாஜியும் ரஜினியும் சென்றனர். ரஜினி ரஜினி என்று மட்டும் கூறி கத்தி கொண்டிருந்தனர் அந்த ரசிகர்கள். இதனால் பயந்த ரஜினிக்கு உடல் எல்லாம் வியர்த்திவிட்டது. இவ்வளவு பெரிய நடிகர் சிவாஜி கணேசன் அருகில் இருக்கும் பொழுது ரஜினி என்று என்னை மட்டும் அழைக்கிறார்களே என்று பயந்துவிட்டார் ரஜினி.

அந்த சமயத்தில் அதை பார்த்த சிவாஜி கணேசன் என்னடா பயப்படுற இது உன் காலம் நடத்து நடத்து என்று சிரித்துக்கொண்டே கூறிவிட்டு சென்றார் சிவாஜி கணேசன்.  இந்த விஷயத்தை ரஜினிகாந்த் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருந்தார்.

To Top