அர்ஜுனும் விஜய்யும் அண்ணன் தம்பியா!.. லியோவில் லோகேஷ் வைத்த சர்ப்ரைஸ்..

தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இதற்கு முன்பு அவர் கொடுத்த ஹிட் படங்களே அதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

இந்த திரைப்படத்தில் நிறைய முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். அதில் அர்ஜுன் மற்றும் சஞ்சய் தத் ஆகியோருக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் லியோ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கள் வந்ததிலிருந்து ஒரு புதிய அனுமானம் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அர்ஜுனின் பெயர் ஹரால்டு தாஸ் என்பது அவரது பிறந்தநாள் அன்று வெளியான வீடியோ மூலமாக தெரிந்தது.

இந்த நிலையின் லியோவின் இரண்டாவது பாடலில் விஜய்யின் பெயர் லியோதாஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே லியோ தாஸும் ஹெரால்டு தாஸும் அண்ணன் தம்பிகளாக இருப்பார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு எண்ணம் வந்துள்ளது. அப்படியே இருக்கும் பட்சத்தில் இந்த படம் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று பலரும் இதற்கு விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.