Connect with us

அவருக்கு கார் எல்லாம் கிடையாது!.. கலைஞர் 100 விழாவில் அவமானப்பட்ட வடிவேலு!. விஜயகாந்த் விஷயத்தால் வன்மம் தீர்த்த திரைத்துறையினர்!..

vadivelu

News

அவருக்கு கார் எல்லாம் கிடையாது!.. கலைஞர் 100 விழாவில் அவமானப்பட்ட வடிவேலு!. விஜயகாந்த் விஷயத்தால் வன்மம் தீர்த்த திரைத்துறையினர்!..

Social Media Bar

Vadivelu : தமிழ் சினிமாவில் உள்ள காமெடி நடிகர்களில் முக்கியமானவர் வடிவேலு. வடிவேலுவின் காமெடிக்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் நல்ல மதிப்பு உண்டு. ஆனால் அது திரையில் மட்டுமே என்று கூறலாம். திரைக்கு வெளியே வடிவேலுவை வெறுப்பவர்களே அதிகம்.

எப்போது வடிவேலு அரசியலுக்கு சென்றாரோ அப்போது முதலே இந்த பிரச்சனை துவங்கியது. அரசியலுக்கு வந்த வடிவேலு விஜயகாந்தை மிகவும் மோசமாக மேடைகளில் விமர்சித்தார். இதனால் மக்கள் மத்தியில் வடிவேலு குறித்து அதிருப்தி ஏற்பட்டது.

மேலும் திரைத்துறையினரும் வடிவேலுவை ஒதுக்க துவங்கினர். தேர்தலுக்கு பிறகு இதனால் வாய்ப்புகளை இழக்க துவங்கினார் வடிவேலு. தொடர்ந்து பல வருடங்கள் சினிமாவிற்கே வராமல் இருந்தார்.

இந்த நிலையில் விஜயகாந்த் அனுமதித்ததை அடுத்து திரும்ப சினிமாவில் இவர் வாய்ப்பை பெற்றதாக கூறப்படுகிறது. இருந்தாலும் விஜயகாந்திற்கும் வடிவேலுவிற்கும் இடையே சுமூகமான உறவு உருவாகவே இல்லை என கூறலாம்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடந்த விஜயகாந்தின் இறப்பிற்கு வடிவேலு வரவில்லை. அதை தாண்டி சமூக வலைத்தளங்களில் கூட இரங்கல் தெரிவிக்கவில்லை வடிவேலு. இதனையடுத்து மீண்டும் திரைத்துறை வடிவேலு மீது அதிருப்தியில் உள்ளது.

சமீபத்தில் நடந்த கலைஞர் 100 விழாவில் வடிவேலு கலந்துக்கொண்டார். அப்போது அனைத்து பிரபலங்களுக்கும் ஏறி செல்லும் கார் வந்திருந்தது. ஆனால் வடிவேலுவிற்கு மட்டும் கார் வரவே இல்லை. இரண்டு மூன்று கார் சென்ற பிறகுதான் வடிவேலுவை அழைத்து சென்றுள்ளனர்.

விஜயகாந்தை வடிவேலு மதிக்காத காரணத்தால் திரைத்துறையினர் வேண்டுமென்றே வடிவேலுவை அவமதிக்கின்றனர் என கூறப்படுகிறது.

To Top