Connect with us

65 லட்சத்தை ஏமாற்றிய தயாரிப்பாளர்!.. திருப்பி அடித்த அரவிந்த்சாமி.. பிடிவாரண்ட் கொடுத்த கோர்ட்..!

Latest News

65 லட்சத்தை ஏமாற்றிய தயாரிப்பாளர்!.. திருப்பி அடித்த அரவிந்த்சாமி.. பிடிவாரண்ட் கொடுத்த கோர்ட்..!

தமிழ் சினிமா நடிகர்களில் அதிக வரவேற்பு பெற்றவராக இருப்பவர் நடிகர் அரவிந்த்சாமி. நிறைய திரைப்படங்களில் நடித்து வந்த அரவிந்த்சாமி பிறகு தனி ஒருவன் திரைப்படம் மூலமாக மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி ஆனார்.

இப்பொழுது மீண்டும் தமிழில் நிறைய திரைப்படங்களில் நடித்த வருகிறார் இந்த நிலையில் அவர் 2018 ஆம் ஆண்டு நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்கிற திரைப்படம் தொடர்பான பிரச்சனைதான் இன்னும் நீண்டு கொண்டிருக்கிறது.

சம்பள விஷயத்தில் பிரச்சனை:

இந்த படத்தில் அமலாபால் சூரி ரோபோ சங்கர் போன்றவர்கள் நடித்திருந்தனர் இது ஒரு காமெடி திரைப்படமாக உருவாகியிருந்தது இதற்கு பழ விதமான விமர்சனங்களும் கிடைத்தது. இந்த படத்தில் நடிப்பதற்காக சம்பள ஒப்பந்தத்தின் படி இன்னும் 30 லட்சம் ரூபாய் அரவிந்த்சாமிக்கு தயாரிப்பாளர் பாக்கி கொடுக்க வேண்டியிருந்தது.

Aravind Swami at 63rd Filmfare Awards 2016 (South) Press Meet

ஆனால் அதை அவர் கொடுக்கவே இல்லை இதனால் அரவிந்த்சாமி தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர்ந்தார். அந்த வகையில் சம்பள பணமான 30 லட்சத்தை கொடுக்க வேண்டும் மேலும் டிடிஎஸ் வரி பிடித்தம் 27 லட்சத்தை சரியாக செலுத்தவில்லை அதையும் செலுத்த வேண்டும்.

இது இல்லாமல் 32 லட்சம் ரூபாய் கடனை திருப்பி தரவில்லை அதையும் தர வேண்டும் என்று கூறி தயாரிப்பாளர் முருகன் குமாருக்கு எதிராக அரவிந்த்சாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மொத்தமாக அரவிந்த்சாமிக்கு தர வேண்டிய 65 லட்சத்தை செலுத்தி விட்டு அது இல்லாமல் 18 சதவீதம் வட்டியும் அவருக்கு வழங்க வேண்டும் என்று கூறியது.

உதாசீனம் செய்யும் தயாரிப்பாளர்:

மேலும் 27 லட்சத்தையும் வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது. ஆனால் அந்த உத்தரவை மதிக்காத தயாரிப்பாளர் அதற்கு எந்த வித பதிலும் தராத காரணத்தினால் அவரது சொத்துக்களை வைத்து எனக்கு கொடுக்க வேண்டிய கடனை அடைக்க வேண்டும் என்று கூறி அரவிந்த்சாமி மீண்டும் மனுதாக்கல் செய்தார்.

அதன்படி உச்சநீதிமன்றம் தயாரிப்பாளரின் சொத்து விவரங்களை தாக்கல் செய்யும் வேண்டும் என்று அவருக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் சொத்து விவரங்களையும் கொடுக்காத தயாரிப்பாளர் தன்னிடம் எந்தவித சொத்துக்களும் இல்லை என்று பதிலளித்திருந்தார்.

இதனால் கடுப்பான நீதிமன்றம் அவரை திவால் ஆனவர் என்று அறிவித்து கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டது எதையாவது செய்து அரவிந்த்சாமிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை ஏமாற்றி விடலாம் என நினைத்த இயக்குனருக்கு இப்பொழுது கைது செய்ய உத்தரவு வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Bigg Boss Update

biggboss
soundarya
vijay sethupathi darsha gupta
anshita
biggboss
manimegalai vj vishal
To Top