Connect with us

ஃபேமிலி படம்னு சொல்லி அந்த மாதிரி படம் பண்ணியிருக்கார்.. ஷங்கரின் கேம் சேஞ்சரில் இந்த விஷயத்தை கவனிச்சீங்களா?

Tamil Cinema News

ஃபேமிலி படம்னு சொல்லி அந்த மாதிரி படம் பண்ணியிருக்கார்.. ஷங்கரின் கேம் சேஞ்சரில் இந்த விஷயத்தை கவனிச்சீங்களா?

Social Media Bar

கோலிவுட்டில் பெரும் பட்ஜெட் இயக்கும் இயக்குனராக அறியப்படுபவர் இயக்குனர் ஷங்கர். பெரும்பாலும் ஷங்கர் இயக்கும் திரைப்படங்கள் என்றாலே பெரிதாக வரவேற்புகள் இருந்து வந்தது.

ஆனால் சமீபத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படத்திற்கு பிறகு அந்த வரவேற்பு என்பதே குறைந்து போனது. இயக்குனர் ஷங்கர் இயக்கிய திரைப்படங்களில் பாய்ஸ் திரைப்படத்திற்கு பிறகு அதிக தோல்வியை கண்ட திரைப்படமாக இந்தியன் 2 திரைப்படம் இருந்தது.

இந்த நிலையில் அடுத்ததாக இயக்குனர் ஷங்கர் இயக்கிய திரைப்படம் கேம் சேஞ்சர். இது ஒரு தெலுங்கு திரைப்படமாகும். ராம்சரண் கதாநாயகனாக நடித்த கேம் சேஞ்சர் தமிழிலும் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படம் கிட்டத்தட்ட தென்னவன் திரைப்படத்தின் கதை அம்சத்தை கொண்டிருப்பதாக பேச்சுக்கள் உள்ளன.

கேம் சேஞ்சர் குடும்பத்தோடு வந்து பார்க்கும் படமாக இருக்கும் என கூறப்பட்டது. ஆனால் இந்த படத்தில் கவர்ச்சி  காட்சிகள் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். படத்தில் யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். அவரை வைத்து கவர்ச்சி காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன.

எனவே கேம் சேஞ்சர் குடும்பத்தோடு பார்க்க உகந்த படமல்ல என்கின்றனர் ரசிகர்கள்.

Bigg Boss Update

To Top