News
குற்றவாளிக்கு ஆதரவாக இருக்கீங்களே.. சமூக வலைத்தளங்களில் கதறும் கங்கனா ரனாவத்…
காலம் காலமாக பாலிவுட் சினிமாவில் நடிகையாக இருந்து வருபவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் தமிழில் தாம் தூம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
அவர் பிறகு பா.ஜ.க கட்சியில் முக்கிய அரசியல்வாதியாக மாறினார் தற்சமயம் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் நடிகை கங்கனா ரனாவத்.

இந்த நிலையில் சமீபத்தில் பெண் காவலரான குல்விந்தர் கவுர் என்பவர் கங்கனா ரனாவத்தை தாக்கியது அதிகமான சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. இது குறித்து குல்விந்தர் கவுர் கூறும் பொழுது 100 ரூபாய் காசுக்காக விவசாயிகள் போராட்டத்தில் பெண்கள் கலந்து கொள்கிறார்கள் என்று கங்கனா கூறி இருந்தார்.
பதவியில் இருந்தாலும் அடி:
அவரால் அந்த போராட்டத்தில் ஒரு நாள் போய் உட்கார முடியுமா? எனது அம்மாவும் அந்த போராட்டத்தில்தான் போராடிக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய அம்மாவின் நீதிக்காக ஆயிரம் வேலைகளை இழக்கவும் தயாராக இருப்பதாக அவர் கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து அவருக்கு பல தரப்புகளில் இருந்து பாராட்டுகள் வரத் துவங்கின. இதனால் கோபமடைந்த கங்கனா ரனாவத் தனது எக்ஸ் தளத்தில் கற்பழிப்பாளர் கொலைகாரன் அல்லது திருடர்கள் ஆகிய அனைவருமே ஒரு வலுவான உணர்ச்சிகள் காரணமாகதான் குற்றங்களை செய்கின்றனர்.
கடுப்பான கங்கனா:
ஆனால் அந்த குற்றவாளிகளுடன் நீங்களும் இணைந்து கொண்டால் நாட்டின் அனைத்து சட்டங்களையும் மீறி குற்றங்கள் சரி அதற்கு உந்துதலாக அமைந்துவிடும்.
ஒருவரை அனுமதி இன்றி தாக்குவது சரியானதா என்று முதலில் யோசிங்கள் அப்படி என்றால் கற்பழிப்பு மற்றும் கொலை செய்தலும் கூட அப்படியான ஒரு விஷயம் தானே.எனவே உங்கள் உளவியல் போக்கை முதலில் மாற்றங்கள் யோகா, தியானம் முதலியாவற்றையும் மேற்கொள்ளுங்கள். என்று பேசிய நிலையில் கங்கனா ரனாவத்தை தற்சமயம் சமூக வலைதளங்களில் வைத்து செய்து வருகின்றனர்.
