இயக்குனர்னா இப்படில இருக்கணும்? – வெற்றியை தொடர்ந்து கார்கி பட இயக்குனர் செய்த வேலை!

சமீபத்தில் நடிகை சாய்பல்லவி நடித்து வெளியான திரைப்படம் கார்கி. இந்த படம் வந்த சமயத்தில் மக்களால் வெகுவாக பேசப்பட்டது. பெண்களுக்கு நிகழும் பாலியல் வன்கொடுமைகளை முக்கிய கதையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. 

இந்த படத்தை இயக்குனர் கெளதம் ராமசந்திரன் இயக்கியிருந்தார். இந்த படம் அவருக்கு அதிகமான புகழை ஏற்படுத்தி தந்திருக்கிறது. நல்ல கதைகளம் கொண்ட திரைப்படங்கள் எப்போதும் வியாபார ரீதியாக பெரும் வெற்றியை தராது.

அதே போல நல்ல கதை இல்லாத போதும் பல சுமாரான படங்கள் நல்ல ஹிட் கொடுத்துள்ளன. ஆனால் கார்கி திரைப்படம் நல்ல கதையையும் கொண்டு வியாபார ரீதியாக நல்ல வருவாயையும் தந்துள்ளது.

இதனால் இயக்குனர் கெளதம் ராமசந்திரன், இந்த விஷயத்தை கொண்டாடலாம் என முடிவு செய்து படத்தில் பணிப்புரிந்தவர்களுக்கு பரிசுகளை வாங்கி தந்துள்ளார். மேலும் தாய்லாந்தில் உள்ள பேங்காக்கிற்கு அவர்களை ஒரு உல்லாச பயணம் அழைத்து சென்றுள்ளாராம் இயக்குனர்.

பெரிய பெரிய இயக்குனர்களே தமிழ் சினிமாவில் கூட பணிபுரிபவர்களுக்கு பெரிதாக ஒன்றும் செய்யாத நிலையில் கெளதம் ராமச்சந்திரன் இப்படி செய்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியமாக உள்ளது.

இதனால் அனைவரும் அவரை பாராட்டி வருவதாக கூறப்படுகிறது.

Refresh