Connect with us

அந்த கமல் படத்துல கைய வச்சிங்கன்னா அவ்வளவுதான் சார்!.. கௌதம் மேனன் வார்னிங் கொடுத்தும் தயாரிப்பாளர் செய்த சம்பவம்!.

kamalhaasan gautham menon

News

அந்த கமல் படத்துல கைய வச்சிங்கன்னா அவ்வளவுதான் சார்!.. கௌதம் மேனன் வார்னிங் கொடுத்தும் தயாரிப்பாளர் செய்த சம்பவம்!.

Social Media Bar

பெரிய நடிகர்களை வைத்து இயக்கும் திரைப்படமாகவே இருந்தாலும் தமிழ் சினிமாவில் அந்த திரைப்படங்களுக்கு டாப் லெவல் வெற்றி கிடைத்துவிடும் என்று 100 சதவீதம் சொல்லிவிட முடியாது. அப்படி பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் சினிமாவில் அதிகமாக உண்டு.

காக்க காக்க திரைப்படம் வெளியான காலக்கட்டம் முதலே இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தை தயாரித்துவிட வேண்டும் என்பது தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணின் கனவாக இருந்தது. கௌதம் மேனனிடம் இதுக்குறித்து பேசவும் அவரும் இதற்கு ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில் கமல்ஹாசனை கதாநாயகனாக வைத்து வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. ஆனால் படத்தின் படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களில் எல்லாம் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணனுக்கு கடுமையான பணப்பிரச்சனை ஏற்பட்டது.

vettaiyadu-vilayadu
vettaiyadu-vilayadu

ஏனெனில் வேட்டையாடு விளையாடு திரைப்படம் கொஞ்சம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம். அமெரிக்காவிற்கு சென்று படப்பிடிப்பை நடத்துவதற்கு விசா எல்லாம் வந்துவிட்ட நிலையில் டிக்கெட் எடுக்க பணமில்லாமல் இருந்துள்ளார் தயாரிப்பாளர்.

அதனை பார்த்த கௌதம் மேனன் இப்போது கூட ஒன்றும் கெட்டு போய்விடவில்லை. வேறு தயாரிப்பாளரை பிடித்து படத்தை தொடரலாம் என கூறியுள்ளார். ஆனாலும் தயாரிப்பாளர் பணம் புரட்டி படத்தை முடித்துள்ளார். பிறகு அந்த படம் அவருக்கு சிறப்பான வெற்றியை கொடுத்தது.

To Top