News
சோப்பு விற்று வரும் விஜய் தங்கை!.. நல்ல வருமானமாம்..
தமிழ் சினிமாவில் அதிக வசூல் கொடுக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். விஜய் நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ.
லியோ திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு நிலவி வருகிறது. ஏனெனில் வெற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கி வருகிறார். விஜய் நடித்த பல படங்களில் அவருடன் துணை கதாபாத்திரத்தில் நடித்த பலர் பிறகு காணாமல் போயுள்ளனர்.
அதே போல துணை கதாபாத்திரத்தில் நடித்தவர்களில் பிரபலமானவர் கில்லி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த நடிகை நான்சி ஜெனிஃபர். ஆனால் கில்லி படத்திற்கு பிறகு அவர் என்னவானார் என்று பலருக்கும் தெரியாமல் இருந்தது.
தற்சமயம் இவர் சொந்தமாக ஆர்கானிக் சோப்பு செய்து விற்று வருகிறார். இனி சினிமாவிற்கு வருவது குறித்து பெரிதாக ஐடியா எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.
