Connect with us

எங்களை நிம்மதியா வாழ விடுங்க.. நயன்தாரா பட இயக்குனரால் அவதிக்குள்ளான உதவி இயக்குனர்..!

Tamil Cinema News

எங்களை நிம்மதியா வாழ விடுங்க.. நயன்தாரா பட இயக்குனரால் அவதிக்குள்ளான உதவி இயக்குனர்..!

Social Media Bar

தமிழில் சமூக சீர்திருத்த திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்கள் மிகக் குறைவான அளவிலேயே இருக்கின்றனர். சில இயக்குனர்கள் மட்டும்தான் தொடர்ந்து அந்த மாதிரியான திரைப்படங்களை இயக்கி வருகின்றனர்.

அந்த மாதிரியான இயக்குனர்களில் கோபி நாயனார் முக்கியமானவர். கோபி நாயனார் இயக்கத்தில் வெளியான அறம் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆழ்துளை கிணறுகளில் விழுந்து இறக்கும் குழந்தைகளின் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படத்தின் கதைகளம் இருந்தது.

இந்த நிலையில் கோபி நாயனார் குறித்து அவருடன் வேலை பார்த்த உதவி இயக்குனர் ஒருவர் குற்றச்சாட்டு ஒன்றை வைத்து இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது கோபி நாயனாரை பொருத்தவரை அவர் திரைப்படங்களில் வேலை செய்வதற்கு சம்பளமே கொடுப்பது கிடையாது.

படப்பிடிப்புகள் முடியும் பொழுது சம்பளம் கேட்டாலும் கூட படத்தில் ஏதாவது ஒரு கதாபாத்திரம் தருவதாக கூறுவார். இல்லையென்றால் எங்கள் திருமணம் போன்ற விசேஷங்களுக்கு நல்ல முறையில் செலவு செய்வதாக கூறுவார்.

ஆனால் சம்பளம் என்று எங்களுக்கு அவர் கொடுத்தது கிடையாது இப்பொழுது எல்லாம் என்னை நேரில் பார்த்தால் அவரது செயல்முறைகள் மோசமாக இருக்கின்றன சம்பளம் கொடுக்காவிட்டால் கூட பரவாயில்லை நிம்மதியாக வாழ விடுங்கள் என்று கூறியிருக்கிறார் அந்த உதவி இயக்குனர்.

To Top