Connect with us

நண்பர்கள்னு நினைச்சதுக்கு முதுகுல குத்திட்டாங்க! – கோபி சுதாகர் குறித்து சர்ச்சையை கிளப்பிய யூ ட்யூப்பர்!

News

நண்பர்கள்னு நினைச்சதுக்கு முதுகுல குத்திட்டாங்க! – கோபி சுதாகர் குறித்து சர்ச்சையை கிளப்பிய யூ ட்யூப்பர்!

Social Media Bar

தமிழில் சினிமா நட்சத்திரங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதை போலவே யூ ட்யூப்பர்களும் கூட மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றனர். மைக் செட், எரும சாணி போல பிரபலமான யூ ட்யூப் சேனல்களில் பரிதாபங்கள் யூ ட்யூப் சேனலும் ஒன்று.

பரிதாபங்கள் சேனலை அதில் நடிக்கும் கோபி மற்றும் சுதாகர் இவர்கள் இருவரும்தான் நடத்தி வருகின்றனர். பரிதாபங்கள் சேனல் வளர்ந்து வந்த போது கோபி மற்றும் சுதாகரின் நண்பர்களுக்கும் கூட அதில் வாய்ப்பு கிடைத்தது.

மோகன் பிவிஆர் மற்றும் பாலு என்ற இருவர் சேர்ந்தனர். சிறிது காலங்கள் இவர்கள் பரிதாபங்கள் சேனலில் பணிப்புரிந்து வந்தனர். கொரோனா ஊரடங்கு சமயத்தில் கோபி சுதாகருக்கும் இந்த இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

இதனால் இவர்கள் பிரிந்துவிட்டனர். தற்சமயம் இந்த இருவரும் செய்கை என்கிற சேனலை நடத்தி வருகின்றனர். கோபி சுதாகரை நம்பி அவர்கள் சேனலுக்கு சென்றதுக்கு எங்களை முதுகுல குத்திட்டாங்க என ஒரு பேட்டியில் கூறியுள்ளனர்.

கோபி மற்றும் சுதாகர் இருவரும் வேண்டுமென்றே அவர்களை சேனலை விட்டு வெளியேற்றியதாக கூறியுள்ளனர்.

Articles

parle g
madampatty rangaraj
To Top