Connect with us

மறுப்படியும் ரீ எண்ட்ரி கொடுக்கிறேன்? – தடாலடியாக இறங்கும் கவுண்டமணி!

News

மறுப்படியும் ரீ எண்ட்ரி கொடுக்கிறேன்? – தடாலடியாக இறங்கும் கவுண்டமணி!

Social Media Bar

1990 களில் தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு என்று இருந்த இடைவெளியை நிரப்பியவர் கவுண்டமணி. ஆரம்பக்கட்டத்தில் செந்திலோடு சேர்ந்து காம்போவாக நடித்து வந்தார் கவுண்டமணி.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல நடிகர்களோடு சேர்ந்து, அவர்களையே கலாய்க்கும் கவுண்டமணியின் பாணி அனைவருக்கும் பிடித்ததாய் இருந்தது. சில வருடங்களில் கவுண்டமணியின் சினிமா பாதை முடிந்து வடிவேலுவின் காலம் துவங்கியது.

சிறிது சிறிதாக வாய்ப்பிழந்த கவுண்டமணி பிறகும் கூட சமுத்திரம், சொக்க தங்கம் போன்ற படங்களில் நடித்து வந்தார். பிறகு கதாநாயகனாக களம் இறங்கி 49 ஒ போன்ற படங்களில் நடித்தார். உடல்நிலை பிரச்சனை காரணமாக வெகு காலங்களாக சினிமாவி நடிக்காமல் இருந்தார். 

இந்நிலையில் இவர் மீண்டும் தமிழில் ஹீரோவாக படம் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பழனிசாமி வாத்தியார் என்பது இந்த படத்தின் பெயராக கூறப்படுகிறது.

வயதான ஒரு வாத்தியாராகவே இதில் வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் அந்த மாதிரியான கதாபாத்திரம் அவருக்கு ஏற்றதாய் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. எனவே கவுண்டமணியை நாம் திரையில் பார்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Articles

parle g
madampatty rangaraj
To Top