Latest News
சமூக வலைத்தளத்தில் பதிவு போட்டே சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வந்த மோகன் ஜி!.. முதலமைச்சர் எடுத்த நடவடிக்கை!.
முன்பெல்லாம் உணவு பொருட்கள் என்பவை உடலுக்கு ஆரோக்கியமானதாக இருந்தன. ஆனால் வளர்ந்து வரும் நாகரிகத்தில் நாம் உண்ணும் உணவுகள் பலவும் நமக்கு தீமை பயக்கும் உணவுகளாக இருந்து வருகின்றன. அரசுக்கே தெரியாமல் பாதுகாப்பற்ற உணவுகள் சாலை ஓரங்களில் எளிதாக விற்கப்படுகிறது.
சவர்மா என்னும் உணவால் கெடுதல் அதிகமாக ஏற்படுகிறது என்று கூட சமீபத்தில் செய்திகளை பார்க்க முடிந்தது. இந்த நிலையில் அதே போல உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவாக ட்ரை ஐஸ் மாறியுள்ளது. நைட்ரஜன் கலந்த இந்த ட்ரை ஐஸை பயன்படுத்தி ஸ்மோக் பிஸ்கட் மாதிரியான உணவுகள் விற்கப்படுகின்றன.
இவை குழந்தைகளுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் வட இந்தியாவில் ஒரு திருவிழாவில் சிறுவன் ஸ்மோக் பிஸ்கட்டை வாயில் போட்டதும் அவனுக்கு மயக்கம் ஏற்பட்டது. இந்த வீடியோ தனது சமூக பக்கத்தில் பகிர்ந்த பிரபல இயக்குனர் மோகன் ஜி இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் ஸ்டாலினை கேட்டிருந்தார்.
மோகன் ஜி தமிழில் ருத்ர தாண்டவம், திரௌபதி மாதிரியான படங்களை இயக்கியிருக்கிறார். இந்த நிலையில் இதற்கு விரைவாக நடவடிக்கை எடுத்த அரசு தமிழ்நாட்டில் ட்ரை ஐஸ் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. உணவுகளில் ட்ரை ஐஸ்களை பயன்படுத்துபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறையும் 10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்