மன அமைதிக்காக பிரிகிறோம்!.. விவாகரத்து விஷயத்தை உறுதி செய்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்!..
தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். தனது 17 ஆவது வயதிலேயே இவர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிவிட்டார். வெயில் என்கிற திரைப்படம் மூலமாக முதன் முதலாக இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜிவி பிரகாஷ்.
இந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு இவர் சைந்தவி என்கிற பெண்ணை திருமணம் செய்தார். சைந்தவியும் ஜிவி பிரகாஷும் சிறு வயது முதலே நண்பர்களாக இருந்து வந்தனர். அந்த நட்பே காதலாக மாற இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே ஜிவி பிரகாஷிற்கும் அவரது மனைவிக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என பேச்சுக்கள் இருந்தன. சமீபத்தில் இவர்களது திருமண நாள் வந்தப்போது கூட சைந்தவி சமூக வலைத்தளங்களில் அதுக்குறித்து எந்த ஒரு பதிவும் இடாமல் இருந்தார்.
இந்த நிலையில் தற்சமயம் ஜிவி பிராகாஷே இதுக்குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது எனக்கும் சைந்தவிக்கும் திருமணமாகி 11 வருடங்கள் ஆன நிலையில் பிரிவதற்கு நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

எங்கள் மன அமைதிக்காக நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் இது. எனவே பத்திரிக்கையாளர்கள் மற்றும் மீடியா நண்பர்கள் எங்கள் நிலையை புரிந்துக்கொண்டு எங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மரியாதை தர வேண்டும் என கூறியுள்ளார் ஜிவி பிரகாஷ்