Connect with us

தமிழர் மாண்பு இவ்வளவு தரம் தாழ்ந்துவிட்டதா? மக்களின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ஜிவி பிரகாஷ்!..

gv prakash

News

தமிழர் மாண்பு இவ்வளவு தரம் தாழ்ந்துவிட்டதா? மக்களின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ஜிவி பிரகாஷ்!..

Social Media Bar

தமிழில் பிரபலமான இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் ஜிவி பிரகாஷ். தனது 17 ஆவது வயதிலேயே தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகிவிட்டார் ஜிவி பிரகாஷ். இவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் அக்கா மகனாவார்.

முதல் படமான வெயில் திரைப்படமே இவருக்கு நல்ல வெற்றியை பெற்று கொடுத்தது. இந்த நிலையில் அடுத்து கதாநாயகனாகவும் களம் இறங்கினார். அதிலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் சிறு வயது முதலே அவர் சைந்தவி என்கிற பெண்ணோடு நட்பில் இருந்து வந்தார். 2013 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். தற்சமயம் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஜிவி பிரகாஷ் தனது மனைவியை விட்டு பிரிவதாக அறிவித்திருந்தார்.

gv prakash saindavi
gv prakash saindavi

இது சமூக வலைத்தளங்களில் பல்வேறு பேச்சுக்களை ஏற்படுத்தியது. மேலும் பலரும் ஜிவி பிரகாஷ் குறித்தும் அவர் மனைவி குறித்தும் அவதூறாக பேசி வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார் ஜிவி பிரகாஷ்.

அதில் அவர் கூறும்போது புரிதலும் போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தில் பேரில் இரு மனங்கள் இணைவது பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது.

பிரபலமாக இருந்தாலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கைக்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்களை வைப்பது ஏற்புடையதல்ல. தமிழர் மாண்பு அந்த அளவுக்கு குறைந்துவிட்டதா? என கேள்வி எழுப்பியுள்ளார் ஜிவி பிரகாஷ்.

மேலும் இந்த பதிவிற்கு யாரும் கமெண்ட் செய்ய முடியாதப்படி செய்து அந்த பதிவை இட்டுள்ளதன் மூலம் அவர் மிகுந்த கோபத்தில் இருக்கிறார் என ரசிகர்கள் இதுக்குறித்து பேசி வருகின்றனர்.

To Top