Cinema History
இளையராஜாவே ஒத்துக்கிட்டாலும் நான் ஒத்துக்க மாட்டேன்!.. ரொம்ப பிடிவாதக்காரர் நம்ம ஜி.வி பிரகாஷ்!..
சினிமாவில் உள்ள ஒவ்வொரு பிரபலங்களும் தங்களுக்கு என ஒரு விதிமுறைகளை வைத்திருப்பார்கள். எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அந்த விதிமுறைகளுக்கு அப்பாற்பட்ட சில விஷயங்களை அவர்கள் செய்ய மாட்டார்கள்.
இப்படியாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும் ஒரு விதிமுறையை கொண்டுள்ளார். அதாவது ஒரு படத்திற்கு வேறு ஒரு இசையமைப்பாளரை கமிட் செய்து விட்டு பிறகு அவர் செட்டாகவில்லை என்று ஜிவி பிரகாஷை இரண்டாவதாக அழைத்தால் ஜிவி பிரகாஷ் அந்தப் படத்திற்கு இசையமைக்க மாட்டார்.
எப்போதும் ஆரம்பத்திலேயே கேட்டால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்று அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் தமிழின் மிகப்பெரும் இசையமைப்பாளரான இளையராஜாவே இப்படியான ஒரு விதிமுறையை வைத்திருக்கவில்லை.
உதாரணமாக பாக்கியராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு திரைப்படத்தில் முதலில் இசை அமைக்க இருந்தது இளையராஜாவின் தம்பி கங்கை அமரன்தான். கங்கை அமரன் இசையமைப்பதாக கூறி போஸ்டர் வரை வெளியாகிவிட்டது.
அதன் பிறகு ஏ.வி.எம் நிறுவனம் இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்தால்தான் நன்றாக இருக்கும் எனக் கூறிய பிறகு பாக்யராஜ் இளையராஜாவிடம் சென்று பேசி அந்த படத்திற்கு இளையராஜாவை இசையமைக்க வைத்தார். அப்படி இருக்கையில் பெரும் இசையமைப்பாளர் இளையராஜாவே இப்படி ஒரு விதிமுறையை வைத்திருக்காத போது ஜிவி பிரகாஷ் இப்படி செய்யலாமா என்று சில நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
