Tamil Cinema News
இந்த வருடம் சாதனை படைத்த ஜிவி பிரகாஷ்.. அனிரூத்தை பின்னாடி தள்ளியாச்சா?.
தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற இசையமைப்பாளராக இருந்து வருபவர் இசையமைப்பாளர் அனிருத். பெரும்பாலும் இப்போதைய தலைமுறையினர் அதிகம் விரும்புவது அனிருத்தின் பாடல்களாக தான் இருக்கின்றன.
அதனாலேயே பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்கள் எல்லாம் அனிருத்தை இசையமைக்கும்படி கேட்கின்றனர். மேலும் படம் வெளியாவதற்கு முன்பே அனிருத்தின் இசையில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகின்றன.
சமீபத்தில் ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படத்திற்கு கூட அந்த திரைப்படத்தில் வரும் மனசிலாயோ என்கிற பாடல் தான் பெரிய விளம்பரமாக அமைந்தது. இந்த நிலையில் இந்த வருடம் அனிருத்தின் சாதனையை முறியடித்து இருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்.
பிரபலமான ஜிவி பிரகாஷ்:
தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் spotify தளமானது தமிழில் அதிகமாக மக்களால் எந்த இசையமைப்பாளரின் பாடல்கள் கேட்கப்பட்டன என்கிற வரிசையை வெளியிடும்.
கடந்த வருடம் ஸ்பாட்டிஃபை ஆப்பில் அனிருத்தின் பாடல்களை தான் மக்கள் அதிகமாக கேட்டிருந்தனர். ஆனால் இந்த முறை அந்த இடத்தை ஜிவி பிரகாஷ் பிடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையில் இந்த வருடம் வந்த ஹே மின்னலே, கோல்டன் ஸ்பேரோ, மினுக்கி மினுக்கி உள்ளிட்ட பாடல்கள் எல்லாம் ரசிகர்களால் அதிகமாக கேட்கப்பட்ட பாடல்களாக அமைந்திருக்கின்றன.
அதனால் அதிகமாக மக்கள் கேட்ட இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் இருக்கிறார்.
