News
ஒழுங்கா மூடிகிட்டு இருந்துருக்கலாம்னு தோணுது!.. வாயை விட்டு பட வாய்ப்பை இழந்த ஜிவி பிரகாஷ்..
தற்போது சினிமாவில் பல நடிகர்களும் பன்முகங்கள் கொண்டவர்களாக இருந்து வரும் நிலையில், ஒரு சில நடிகர்கள் இசையமைப்பாளராகவும், பாடகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் இருந்து வருகிறார்கள்.
சினிமாவில் தங்களின் திறமையை நிரூபித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த பல நடிகர்கள் உள்ள நிலையில் தன்னுடைய இசையின் மூலம் ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்தவர் நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ். தற்போது தனக்கு வந்த ஒரு படத்தின் வாய்ப்பை தானே வாயை விட்டு நழுவ விட்ட ஒரு சம்பவத்தை பற்றி கூறியிருக்கிறார்.
நடிகர் ஜி.வி பிரகாஷ்
இசையமைப்பாளர், பின்னணி பாடகர், திரைப்பட தயாரிப்பாளர், மற்றும் நடிகராவார். இவர் வெயில் திரைப்படத்தில் இசையமைத்ததன் மூலம் தமிழக மக்களால் அறியப்பட்டவர். மேலும் அப்படத்தில் இசையமைத்தன் காரணமாக பலரின் பாராட்டுகளையும் பெற்றார்.

முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஜி.வி பிரகாஷ், ஒரு தேசிய விருது, 3 பிலிம்ஸ் ஃபேர் விருதுகளையும் வென்றுள்ளா். ஜி.வி பிரகாஷ், ஏ. ஆர் ரைஹானா அவரின் மகன் ஆவார். மேலும் ஏ.ஆர். ரகுமான் ரைஹானாவின் சகோதரர் ஆவார்.
இந்நிலையில் இசை பின்னணியை கொண்ட குடும்பத்தில் பிறந்த ஜி.வி பிரகாஷ் பல இசையமைப்பாளர்களிடம் உதவி இசையமைப்பாளராக சேர்ந்து அதன் பிறகு வெயில் திரைப்படத்தில் இசை அமைத்திருக்கிறார்.
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இவரின் இசை அனைவராலும் பாராட்டை பெற்றது. அதன் பிறகு பல படங்களில் இசையமைத்த ஜி.வி பிரகாஷ் நடிகராகவும் பல படங்களில் நடித்திருக்கிறார்.
பேட்டி ஒன்றில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பற்றி கூறிய ஜி.வி பிரகாஷ்
பேட்டி ஒன்றில் பேசிய ஜி.வி பிரகாஷ், தனக்கு முதலில் காதல் படத்தில் இசையமைப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது என்னுடைய மியூசிக் சாம்பிள் ஒன்று கொடுத்தேன். அப்போது என்னிடம் நீ கஷ்டப்பட்டு பிரச்சனை எல்லாம் இருந்து மேலே வர வேண்டும் என நினைக்கிறாயா? என்று என்னிடம் கேட்டார்கள் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை நான் பல விளம்பர படங்களுக்கு இசை அமைத்திருக்கிறேன். மேலும் என்னுடைய இசை சாம்பிள் கொடுத்திருக்கிறேன். பார்த்து பிடித்திருந்தால் நான் படத்திற்கு இசையமைக்கிறேன் என கூறினேன்.
இதைக் கேட்டதும் அவர் அப்செட் ஆகிவிட்டார். அதன் பிறகு அந்த படத்தில் நான் இசை அமைக்கவில்லை. அப்போது நான் நினைத்தேன் என் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம். வாய்ப்பு இப்படி போய்விட்டதே என வருத்தப்பட்டேன். ஆனால் நான் உண்மையை தான் சொன்னேன். வெயில் படம் வெளிவந்த பிறகு வசந்தபாலனிடம் உண்மையாகவே இந்த படத்திற்கு இவன் தான் இசையமைத்தானா என்று சந்தேகம் படும்படியாக கேட்டுள்ளார். என ஜி.வி பிரகாஷ் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
