நடிகர் சூர்யா ஒரு காலகட்டத்தில் நடிகர் விஜய், அஜித் ஆகிய நடிகர்களுக்கு போட்டி நடிகராக இருந்தவர் ஆவார். சூர்யாவிற்கு பெரிய வெற்றியை கொடுத்த படங்கள் என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் இயக்குனர் ஹரியின் திரைப்படங்கள் முக்கிய பங்கு வகிக்கும்.
இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த வேல், சிங்கம், 1, 2, 3 ஆகிய நான்கு திரைப்படங்களுமே நல்ல வெற்றியை கொடுத்தன. சிங்கம் 3 திரைப்படத்திற்கு பிறகு அந்த அளவிற்கு வெற்றியை கொடுத்த இன்னொரு படத்தில் இப்போது வரை சூர்யா நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அந்த அளவிற்கு சிங்கம் 3 பெரிய வெற்றியை கொடுத்தது. மூன்று பாகங்களும் நல்ல வெற்றியை கொடுத்த பிறகும் கூட அதற்குப் பிறகு இயக்குனர் ஹரி சிங்கம் திரைப்படத்தின் நான்காம் பாகத்தை எடுக்கவில்லை.

ஆனால் பாலிவுட்டில் சிங்கம் திரைப்படம் நிறைய பாகங்களை எடுக்கப்பட்டு வெற்றி அடைந்தும் வருகிறது. இந்த நிலையில் இது குறித்து இயக்குனர் ஹரியிடம் கேட்ட பொழுது சிங்கம் திரைப்படத்தை பொறுத்தவரை இனிமேல் அதை சிறப்பாக எடுக்க முடியாது என்று நினைக்கிறேன்.
அந்த படத்திற்கான காலம் முடிந்துவிட்டது. மீண்டும் சூர்யாவை போலீசாக வைத்து வேறு கதைகளத்தை கொண்டு படம் எடுக்கலாம் தவிர சிங்கம் திரைப்படத்தை தொடர முடியாது என்று கூறியிருக்கிறார் இயக்குனர் ஹரி.






