வயதான நபருடன் திருமணமா.. பதில் கொடுத்த எதிர்நீச்சல் நடிகை!.
சீரியல் மூலமாக வெகு காலங்களாக மக்கள் மத்தியில் பிரபலமானவராக நடிகை ஹரிப்பிரியா இருந்து வருகிறார். 1992 ல் பிறந்த ஹரிப்பிரியா 2011 முதலே டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் முதன்முதலாக ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் அறிமுகமானார்.
பள்ளி வாழ்க்கையை கூறும் வகையில் எடுக்கப்பட்ட இந்த சீரியல் அப்பொழுது அதிக வரவேற்பு பெற்றது. அந்த வகையில் ஹரி பிரியாவிற்கும் இந்த சீரியல் முக்கிய சீரியலாக அமைந்தது. அதனை தொடர்ந்து ஜீ தமிழில் மேற்கு மாம்பழத்தில் ஒரு காதல் என்கிற சீரியலில் நடித்தார்.
ஹரிபிரியா
பிறகு லட்சுமி வந்தாச்சு என்று அவர் நடித்த சீரியல் கிட்டத்தட்ட 3 வருடங்கள் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றது. சன் டிவியில் பிரியமானவள், விதி மாதிரியான தொடர்களில் இவர் நடித்திருக்கிறார். தொடர்ந்து நிறைய சீரியல்களில் நடித்து வந்திருக்கிறார் ஹரிப்பிரியா.

அதேசமயம் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் இவர் நடித்த திரைப்படம் எதுவும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் மட்டும் இவரது கதாபாத்திரம் கொஞ்சம் பேசப்படும் கதாபாத்திரமாக இருந்தது.
வயதான நபருடன் திருமணம்
அதற்கு பிறகு அவர் நடித்த என்ன சொல்லப் போகிறாய், கருங்காப்பியம் போன்ற திரைப்படங்கள் எல்லாம் பெரிதாக வரவேற்பை தரவில்லை. சமீபத்தில் அவர் நடித்த எதிர்நீச்சல் சீரியல் அதிகமாக பேசப்பட்டது. இதில் நந்தினி கதிர்வேல் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஹரிப்பிரியா.
மற்ற சீரியலிலேயே ஒரு காமெடி கதாபாத்திரமாக ஹரிப்பிரியாவின் கதாபாத்திரம் இருந்ததால் குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் வரவேற்பை பெற்ற ஒரு நடிகையாக மாறினார் ஹரிபிரியா. அதனை தொடர்ந்து ஒரு இசை நிகழ்ச்சியிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
யார் மாப்பிள்ளை
இன்னிசையே என்னும் சண்டை வெளியான இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். எதிர்நீச்சல் சீரியலுக்குப் பிறகு அவருக்கு நிறைய நாடகங்களில் வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் இவரை குறித்து வெளிவந்த வதந்தி குறித்து தற்சமயம் பதில் அளித்து இருக்கிறார் ஹரிப்பிரியா.

வயதான ஒரு நபருடன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போவதாக வதந்திகள் பரவி வந்தன. இந்த நிலையில் யூ.டியூப் சேனல் ஒன்று இதனை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹரிப்பிரியா யாருடா நீங்க எல்லாம் என்று கூறி அந்த யூ ட்யூப் வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு இருக்கிறார் அதுதான் இப்பொழுது பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது.