என்னை ரே* பண்ணி.. காச ஏமாத்தி.. பிரபல யூ ட்யூப்பர் மீது வழக்கு போட்ட நடிகை.. லீக்கான வீடியோ..!

Youtube பிரபலங்கள் என்பவர்கள் தற்சமயம் இணையத்தின் வளர்ச்சியின் காரணமாக சமூக வலைதளங்களில் முக்கியமானவர்களாக மாறி இருக்கின்றனர்.

மேலும் சினிமாவிலும் கூட அவர்களுக்கெல்லாம் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கி இருக்கின்றன. அப்படியாக தெலுங்கில் அதிக பிரபலமான ஒரு யூ ட்யூப்பராக இருந்தவர்தான் ஹர்ஷா சாய்.

மிக சிறுவயதிலேயே youtube சேனல் துவங்கிய ஹர்ஷா சாய் அனைவருக்கும் நல்லது செய்து அதையே youtube வீடியோவாக செய்து போட்டு அதிக பிரபலம் அடைந்தார்.

அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய சப்ஸ்கிரைபர்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கி அதன் மூலமாக அதிக பிரபலம் அடைந்தார். அதற்குப் பிறகு கஷ்டப்படும் பலருக்கும் லட்சங்களில் பணங்களை கொடுத்து அதையும் வீடியோவாக செய்து போட்டு வந்தார்.

Mitraaw Sharma

Social Media Bar

முதல் திரைப்படம்:

இந்த நிலையில் மற்ற மொழிகளிலும் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்தனர் அதனை தொடர்ந்து ஹிந்தி தமிழ் என்று மற்ற மொழிகளிலும் youtube சேனல் துவங்கி நடத்தி வருகிறார்.

சமீபத்தில் இவர் ஒரு படத்தில் நடித்து வந்தார். அது அந்த படத்தின் டீசர் கூட வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்தை தெலுங்கு பிக்பாஸ் மூலமாக பிரபலம் அடைந்த நடிகை மித்ரா சர்மா தயாரித்து நடித்து வருகிறார்.

இதில் நடித்து வரும் அதே சமயத்தில் அவருக்கும் ஹர்ஷா சாய்க்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஹர்ஷாவின் மீது வழக்கு ஒன்றை கொடுத்திருக்கிறார். மித்ரா சர்மா.

ஹர்ஷா சாய் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 2 கோடி ரூபாய் வாங்கி ஏமாற்றி விட்டதாகவும் மேலும் தன்னை கற்பழித்து விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இந்த நிலையில் போலீசார் அவரை மெடிக்கல் டெஸ்ட் எடுக்க சொல்லி இருக்கின்றனர் அதில் குற்றம் நிரூபணமாகும் பட்சத்தில் ஹர்ஷா சாய்க்கு தண்டனைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது இருந்தாலும் ஹர்ஷா சாய் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகவே இன்னும் பேசி வருகின்றனர். இதற்கு நடுவே இவர்கள் பேசிக்கொண்டதாக ஆடியோ ஒன்றும் வலம் வந்து கொண்டுள்ளது.