News
முட்டாள்கள்கிட்டலாம் பேச முடியாது.. போஸ்டை டெலிட் செய்த நயன்தாரா.. மருத்துவர் பார்த்த வேலைதான் காரணம்!.
நேற்று முதலே அதிக சர்ச்சையான ஒரு விஷயமாக நயன்தாரா போட்ட பதிவு ஒன்றுதான் இருந்து வருகிறது. நயன்தாரா தமிழ் சினிமாவில் அதிக பிரபலம் என்பதால் சமூக வலைதளங்களில் அவருக்கு நிறைய ஃபாலோவர்ஸ் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவருடைய மருத்துவர் கூறியதற்கு இணங்க செம்பருத்தி டீயின் நன்மைகள் குறித்து நயன்தாரா ஒரு பதிவு ஒன்றை போட்டு இருந்தார் அதில் செம்பருத்தி உடலுக்கு பல நன்மைகளை செய்வதாகவும், நோய்களிலிருந்து பாதுகாப்பதாகவும், சருமத்தை பாதுகாப்பதாகவும் பல வழிகளில் செம்பருத்தி டீ குறித்து எழுதி இருந்தார் நயன்தாரா.
நயன்தாரா பதிவு:
இந்த நிலையில் இதற்கு வன்மையாக எதிர்ப்பு தெரிவித்த பிரபல கேரள மருத்துவரான லிவர் டாக் என்று அழைக்கப்படும் சிரியாக் அபி பிலிப்ஸ் ஒரு பதிவு ஒன்று ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் அவர் கூறும் பொழுது நயன்தாரா வெளியிட்டிருக்கும் தகவல்கள் எதுவும் உண்மை கிடையாது. அவை எதுவுமே அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டது கிடையாது. செம்பருத்தி டீ இந்த மாதிரி நன்மைகளை ஏற்படுத்தும் என்பதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது.

நாட்டு மருத்துவத்திற்கு முதலில் ஆதாரமே கிடையாது. எனவே இந்த மாதிரி தவறான செய்திகளை எல்லாம் பிரபலங்கள் பரப்ப கூடாது என்று கூறியிருந்தார். இதனை அடுத்து நயன்தாரா அந்த பதிவையே டெலிட் செய்து விட்டார்.
அதற்கும் ரிப்ளை செய்த சிரியாக் அபி பிலிப்ஸ் கூறும் போது குறைந்தபட்சம் தவறான பதிவுக்கு மன்னிப்பு கூட கேட்காமல் இப்படி டெலிட் செய்து விடுகிறார் நயன்தாரா என்று பதிவிட்டு இருந்தார்.
பதில் கொடுத்த நயன்தாரா:
இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் முட்டாள்களுடன் எப்பொழுதும் விவாதம் செய்யாதீர்கள். அவர்கள் உங்களை அவர்கள் தரத்திற்கு குறைத்து உங்களுடன் சண்டையிடுவார்கள் என்று கூறியிருந்தார்.
இதனை அடுத்து லிவர் டாக்கை தன் நயன்தாரா முட்டாள் என்று கூறுகிறார் என்று பேச்சுக்கள் இருந்து வந்தது. இதற்கு நடுவே நயன்தாராவின் மருத்துவர் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது செம்பருத்தியில் நன்மைகள் இல்லை என்று என்னுடைய கிளைன்ட் நயன்தாராவிடம் யாரோ சண்டை இட்டதாக கேள்விப்பட்டேன்.

செம்பருத்தி நன்மை இல்லாமல் தான் அதை அனைத்து மூலிகை சார்ந்த இடங்களிலும் பயன்படுத்துகிறார்களா? ஒரு ஸ்பாவிற்கு சென்றால் கூட அங்கு செம்பருத்திதான் தண்ணீரில் கலந்து பயன்படுத்துகிறார்கள் என்று இது குறித்து பேசி இருந்தார்.
இதனை அடுத்து இந்த பிரச்சனை தான் தற்சமயம் சமூக வலைதளங்களில் பெரிய பிரச்சனையாக சென்று கொண்டிருக்கிறது.
