காத்திருந்து அடித்த தனுஷ்… அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம்..! நயன்தாராவுக்கு இனிமேதான் பிரச்சனை..!
நடிகர் தனுஷ் வெகுகாலங்களாகவே தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு நடிகராக இருந்து வருகிறார். நேரடியாக தனுஷை எந்த ஒரு கதாநாயகியும் இதுவரை எதிர்த்தது கிடையாது.
அவரை முதன்முதலாக எதிர்த்த நடிகை என்றால் அது நடிகை நயன்தாராதான். நடிகை நயன்தாராவின் வாழ்க்கை வரலாற்றை கூறும் வகையில் எடுக்கப்பட்ட ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகளை பயன்படுத்தி இருந்தார் நயன்தாரா.
அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம்
இதற்கு சரியான அனுமதியை இவர் தனுஷிடம் வாங்கவில்லை இதற்காக தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த நிலையில் இதனை விமர்சித்து நயன்தாரா கடிதம் ஒன்றை வெளியிட்டார்.
ஆனால் தனுஷ் அதற்கு எந்த பதிலும் அளிக்காமல் இருந்து வந்தார் இந்த நிலையில் தற்சமயம் உச்சநீதிமன்றத்தில் இவர் இது தொடர்பாக வழக்கு போடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கில் நெட்ப்ளிக்ஸ் ஒடிடி நிறுவனம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய மூவரின் பெயரும் இடம் பெற்று இருக்கின்றன. மேலும் இந்த வழக்குக்கு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் நீதிமன்றத்திற்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து தனுஷ் ரசிகர்கள் கூறும் பொழுது எந்த ஒரு பதிலும் தனுஷ் அளிக்கவில்லை என்றாலும் கூட சட்ட ரீதியாக சரியாக அணுகி இருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.