மூளை நோயால் பாதிக்கப்பட்ட டை ஹார்ட் கதாநாயகன் – கவலையில் ரசிகர்கள்

ஹாலிவுட்டில் டை ஹார்ட், எக்ஸ்பெண்டபில்ஸ் போன்ற பிரபலமான திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் ப்ரூஸ் வில்லிஸ்.

Social Media Bar

பெரும்பாலும் இவர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே நல்ல ஹிட் கொடுப்பதால் இவருக்கென்று ஒரு ரசிக பட்டாளம் உண்டு. தற்சமயம் 66 வயதை எட்டியுள்ளார் ப்ரூஸ் வில்லிஸ்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு உடல் நல குறைவு காரணமாக ஹாலிவுட் சினிமாவில் இருந்து விலகினார் ப்ரூஸ் வில்லிஸ். பிறகு ஒரு வருடமாக அவரது உடல் நிலை குறித்து எந்த வித அப்டேட்டும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தற்சமயம் ப்ரூஸ் வில்லிஸ்க்கு மூளை தொடர்பான நோய் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நோயின் காரணமாக அவரின் மூளை செல்களில் பாதிப்பு ஏற்படும். இதனால் அவரது கை கால் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

மேலும் பேசுவதிலும், எழுதுவதிலும் தடுமாற்றம் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து ப்ரூஸ் வில்லிஸின் ரசிகர்கள் மிகவும் கவலை தெரிவித்து வருகின்றனர்.