Tamil Cinema News
பட வாய்ப்பு இல்லாததால் அந்த வேலையில் இறங்கிய பால்கோவா நடிகை.. இப்போ கோடிகளில் கொட்டுதாம்..!
சினிமா பிரபலங்களுக்கு எல்லா காலங்களிலும் பட வாய்ப்புகள் கிடைத்துக்கொண்டே இருப்பது கிடையாது. பல வேலைகளில் நடிகைகள் பட வாய்ப்பு கிடைக்காமல் நிறையவே கஷ்டப்படுகின்றனர்.
உடல் எடை அதிகரித்தல், வயதாகுதல், திருமணமாகுதல், குழந்தை பிறத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் அவர்களுக்கு வாய்ப்புகள் என்பது கிடைக்காமல் போகிறது. இந்த நிலையில் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளில் பிரபலமானவர் நடிகை ஹனி ரோஸ்.
பெரும்பாலும் ஹனி ரோஸ் மிக கவர்ச்சியாக நடிக்க கூடியவராவார். தமிழில் எப்படி தமன்னா பால்கோவா நடிகை என அழைக்கப்படுகிறாரோ அதே போல தெலுங்கில் ஹனி ரோஸ் அழைக்கப்படுகிறார்.
இவர் ஜீவா நடித்த சிங்கம் புலி திரைப்படத்தில் நடித்திருந்தார். அது ஒன்றுதான் இவர் தமிழில் நடித்த திரைப்படம். அதற்கு பிறகு பல மொழிகளில் இவர் நடித்து வந்தார்.
ஆனால் இப்போது வயதாகிவிட்டதால் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் என எதுவும் வரவில்லை. இதனையடுத்து ஹனிரோஸ் விளம்பரங்களில் நடிக்க துவங்கினார். மேலும் நிறைய கடை திறப்பு விழாக்களில் கலந்துக்கொண்டு வருகிறார் ஹனிரோஸ்.
இந்த நிலையில் ஒரு கடை திறப்புக்கு மட்டும் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் வாங்குகிறாராம் நடிகை ஹனிரோஸ். இதன் மூலம் திரைப்படங்களை விடவும் இதில் அதிகம் சம்பாதிக்கிறார் ஹனிரோஸ் என்கின்றனர் சினிமா வட்டாரத்தினர்.