Connect with us

நான் உன்னை காக்கா பிடிக்கிறேன்னே நினைச்சுக்க!.. யோகி பாபுவிடம் இளவரசு சொன்ன விஷயம்!..

ilavarasu yogi babu

Cinema History

நான் உன்னை காக்கா பிடிக்கிறேன்னே நினைச்சுக்க!.. யோகி பாபுவிடம் இளவரசு சொன்ன விஷயம்!..

Social Media Bar

சந்தானத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரிதாக அந்த இடத்தை நிரப்புவதற்கு ஒரு காமெடி நடிகர் இல்லை என்று கூறலாம். அந்த நிலையில் அந்த வெற்றிடத்தை நிரப்பியவர்தான் நடிகர் யோகிபாபு. தமிழ் சினிமாவில் கருப்பான தேகம் கொண்ட நடிகர்களால் சாதிக்க முடியுமா என்கிற கேள்வி எழுந்த போதெல்லாம் அதனை பொய் என நிரூபித்த பல நடிகர்கள் உண்டு.

ரஜினிகாந்த், நடிகர் ராகவா லாரன்ஸ், வடிவேலு என்ற அந்த கருப்பு நடிகர்கள் வரிசையில் யோகி பாபு முக்கியமானவர். ஏனெனில் பெரும்பாலும் பேசும்போது மக்கள் லட்சணத்தை பற்றி விரிவாக பேசுவார்கள்.

கருப்பாக இருந்தாலும் பெரிய முக லட்சணம் இருந்தால் தான் அவர்கள் சிறப்பான நடிகர்களாக முடியும் என்று பேசுவார்கள். பலரையும் உருவ கேலியும் செய்வார்கள். அப்படி சமூகத்தால் உருவ கேலிக்கு உள்ளாகி தற்சமயம் அதே சமூகத்திடம் ஒரு அங்கீகாரத்தை பெற்று இருக்கிறார் நடிகர் யோகி பாபு.

ஆரம்பத்தில் காமெடியனாக நடிக்க துவங்கிய யோகி பாபு பிறகு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததால் அவருக்கு அதிலும் வெற்றி கிடைத்தது.

அப்படி அவர் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் மண்டேலா. மண்டேலா திரைப்படம் அடிப்படையில் சாதிய அடிப்படையிலான கதையைக் கொண்டிருக்கும். அந்த படத்தில் ஒரு முடிவெட்டும் தொழிலாளியாக நடித்திருப்பார் யோகி பாபு.

முடி வெட்டும் பிரிவை சேர்ந்தவர்கள் பொதுவாகவே ஊரைவிட்டு ஒதுக்குப்புறமாகவே வைக்கப்பட்டிருப்பார்கள். அப்படியே வைக்கப்பட்டிருக்கும் யோகி பாபுவின் ஒரு ஓட்டை வைத்து படத்தின் கதை செல்லும்.

இந்த திரைப்படம் குறித்து இளவரசு ஒரு பேட்டியில் கூறும் பொழுது நான் அந்த படத்தை பார்த்தவுடனே யோகி பாபுவை நேரில் சந்தித்தேன் அப்பொழுது யோகி பாபுவிடம் ஒரு விஷயத்தை கூறினேன். யோகி பாபு நான் உன்னை காக்கா பிடிக்கிறேன் என்று நீ நினைத்துக் கொள். ஆனால் இந்த திரைப்படத்தில் நீ சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறாய் அப்படியான ஒரு நடிப்பை ஒரு பல வருடம் நடித்த ஒரு பெரும் நடிகர்களால் தான் கொண்டுவர முடியும்.

அதை நீ அசால்டாக செய்திருந்தாய் என்று அவரை நேரில் புகழ்ந்ததாக இளவரசு தனது பேட்டியில் கூறி இருக்கிறார்.

To Top