Cinema History
யுவன் சங்கர் ராஜா பாட்டை கேட்டால் மூளை வேலை செய்யாது!.. அட்வைஸ் கொடுக்கும் இளையராஜா..
Yuvan Shankar Raja: தென்னிந்திய இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. அன்னக்கிளி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இளையராஜா பல திரைப்பட பாடல்களை கொடுத்திருக்கிறார்.
ஒரு இசையமைப்பாளர் ஆயிரத்திற்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. ஆங்கிலத்தில் ஆல்பம் பாடல்கள் தயார் செய்யும் பாடகர்கள் கூட அதிகபட்சம் ஒரு வருடத்திற்கு 10 பாடல்களுக்கு இசையமைத்தால் பெரிய விஷயம் என்று கூறலாம்.
அப்படி இருக்கும் பொழுது வருடத்திற்கு ஆயிரம் பாடல்களுக்கு இசையமைக்கும் ஒரு நபராக இளையராஜா இருந்திருக்கிறார். ஏ.ஆர் ரகுமான் தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற துவங்கிய பொழுது இளையராஜாவிற்கான வரவேற்பு குறைய தொடங்கியது.
இதனை கண் முன் நின்று பார்த்த யுவன் சங்கர் ராஜா வெளிநாட்டு இசைகளை கற்றுக் கொண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார். கிட்டத்தட்ட ஏ.ஆர் ரகுமானுக்கு டஃப் கொடுக்கும் ஒரு இசையமைப்பாளராகத்தான் தமிழ் சினிமாவிற்குள் வந்தார் யுவன் சங்கர் ராஜா.
இளையராஜா கொடுத்த அட்வைஸ்:
இந்த நிலையில் ஒரு மேடை பேச்சு ஒன்றில் யுவன் சங்கர் ராஜா தந்தையிடம் எனக்கு ஏதாவது அட்வைஸ் கொடுக்க வேண்டும் என்றால் என்ன கொடுப்பீர்கள் என்று கேட்டார். அப்பொழுது இளையராஜா ஒரு விஷயம் கூறியிருந்தார்.
இசை அமைப்பதற்காக மின்சாதன பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று யுவனிடம் கூறினார். ஏனெனில் பொதுவாகவே இளையராஜா ஹார்மோனியப்பெட்டியை வைத்துக்கொண்டுதான் பல காலங்களாக இசையமைத்து வந்தார்.
இளையராஜா கூறும் பொழுது இந்த மாதிரியான மின் சாதனங்களை வைத்து வரும் இசையை கேட்டால் அவை மூளை நரம்புகளை வேலை செய்ய விடாமல் செய்துவிடும். இசை என்றால் அதில் ஒரு உயிர் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இருந்தாலும் இப்போது வரை யுவன் சங்கர் ராஜா மின்சாதன பொருட்களை பயன்படுத்திதான் இசை அமைத்து வருகிறார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்