முடிவுக்கு வந்த இளையராஜா ரஜினி பிரச்சனை.. இனிமே சிக்கல் இல்ல..!
இசையமைப்பாளர்களின் பாடல்களை அவர்களது அனுமதி இல்லாமல் பயன்படுத்துவது குறித்து தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரச்சனைகள் இருந்து வருகிறது.
முக்கியமாக இளையராஜா தனது பாடலுக்கான காப்புரிமையை கேட்டு வந்து கொண்டிருக்கிறார். மேலும் அவருடைய அனுமதியில்லாமல் அவரது பாடல்களை திரைப்படங்களில் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தி வருகிறார்.
இளையராஜா சில இயக்குனர்கள் இளையராஜாவிடம் சென்று அனுமதி பெற்று பாடல்களை வைத்தாலும் கூட நிறைய இயக்குனர்கள் அவரது அனுமதி இல்லாமலேயே பாடல்களை பயன்படுத்துகின்றனர்.
அப்படியாக இளையராஜா குற்றம் சாட்டிய இயக்குனர்களில் லோகேஷ் கனகராஜும் ஒருவர். அவர் தொடர்ந்து அவரது திரைப்படங்களில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தி இருக்கிறார்.

இளையராஜா ரஜினி பிரச்சனை:
அடுத்து ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி திரைப்படத்தில் கூட இளையராஜாவின் பாடல் ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து இளையராஜா ஏற்கனவே அதிருப்தியில் இருந்து வந்தார். தற்சமயம் அந்த பிரச்சனை சரியாகி உள்ளதாக கூறப்படுகிறது ரஜினிகாந்த் இளையராஜாவை நேரில் சந்தித்து இது பற்றி பேசியதாகவும் இதனால் இந்த பிரச்சனை தற்சமயம் சுமூகமாக முடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏனென்றால் இன்னும் கொஞ்ச நாளில் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் அடுத்த வருடம் எப்படியும் இந்த திரைப்படம் திரைக்கு வந்துவிடும். எனவே இந்த சிக்கலை சரி செய்ய வேண்டும் என்று ரஜினி நேரில் சென்று இதை சரி செய்து இருக்கிறார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.