Cinema History
மியூசிக் போட எவ்வளவு காசு வாங்குறீங்க! – சம்பளமே சொல்லாமல் கடைசியில் அதிர்ச்சியை கிளப்பிய இளையராஜா!
1980 கள் என்பது தமிழ் சினிமாவில் மிக முக்கியமான காலக்கட்டம் ஆகும். கே.எஸ் ரவிக்குமாரில் துவங்கி பல முக்கிய நடிகர்கள், இயக்குனர்கள் உருவான காலக்கட்டமாக 1980 உள்ளது.
பல படங்களில் உதவி இயக்குனராக இருந்து இயக்குனராகும் ஒருவருக்கு முதல் பட வாய்ப்புகள் கிடைப்பதில் நிறைய சிரமம் இருக்கும். முக்கியமாக முதல் படத்திற்கான பட்ஜெட் மிக குறைவாக இருக்கும். அந்த பணச்செலவில் ஒரு வெற்றி படத்தை கொடுத்தால் மட்டுமே அவர்கள் அடுத்த படத்தை இயக்க முடியும்.
இதே காலக்கட்டத்தில்தான் இயக்குனர் பி.வாசு இயக்குனராவதற்கான முயற்சியில் இருந்தார். தமிழில் அவரது முதல் படம் பன்னீர் புஷ்பங்கள். பன்னீர் புஷ்பங்கள் திரைப்படத்திற்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் 5 லட்சம் மட்டுமே.
எனவே படத்திற்கு அதிகப்பட்சம் புது முகங்களாக தேர்ந்தெடுத்து படத்தை இயக்கினார் வாசு. அப்போது இளையராஜா இசைக்கு அதிக வரவேற்பு இருந்தது. எனவே இசையை மட்டும் இளையராஜாவை போட சொல்வோம் என இளையராஜாவை சந்தித்தனர் படக்குழுவினர்.
அப்போது இளையராஜா 1 லட்ச ரூபாய் சம்பளமாக வாங்கி கொண்டிருந்தார். ஆனால் இவர்களால் ஒரு லட்ச ரூபாய் எல்லாம் சம்பளமாக தர முடியாத நிலை. எனவே இளையராஜாவை பார்த்தவுடன் சம்பளம் தொடர்பாக பேசியுள்ளனர். சம்பளமெல்லாம் அப்புறம் பேசிக்கொள்ளலாம் என கூறிய இளையராஜா படத்திற்கு இசையமைக்கும் வேலையில் இறங்கிவிட்டார்.
பாடல்கள் ரெக்கார்டீங் வேலைகள் வரை நடந்துவிட்டன. ஆனால் இளையராஜா சம்பளத்தை பற்றி மட்டும் பேசவே இல்லை. இறுதியாக மிகவும் வழுக்கட்டாயமாக சம்பளத்தை பற்றி கேட்டுள்ளார் வாசு. நீங்க இதுக்கு காசு எதுவும் தர வேண்டாம் என கூறிவிட்டார் இளையராஜா.
அதிர்ச்சியாக ஏன் சார் என கேட்டுள்ளார் வாசு. முதல் படம் பண்ரீங்க முதல்ல வளர்ந்து வாங்க என கூறியுள்ளார் இளையராஜா. பி.வாசு இயக்கிய பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம் வெற்றி பெற்றதற்கு அதில் இடம் பெற்ற பாடல்களுக்கும் முக்கிய இடமுண்டு.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்