இளையராஜா அன்னைக்கு எடுத்த முடிவால் என் படிப்பே நின்னு போச்சு!.. சித்ரா வாழ்க்கையில் நடந்த சம்பவம்!.
Ilayaraja and KS chitra தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் வளர்ச்சி அடைவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இசையமைப்பாளர் இளையராஜா. ஏனெனில் இளையராஜாவை ஒரு வறுமையான குடும்பத்திலிருந்து வந்து திரைத்துறையில் வாய்ப்பு தேடி அலைந்தவர் என்பதால் அந்த சமயத்தில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த பலருக்கும் அவர் வாய்ப்புகளை கொடுத்தார்.
அந்த சமயத்தில் பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து, பாக்கியராஜ் என்று பலரும் கிராமத்தில் இருந்து வாய்ப்பு தேடி சினிமாவிற்கு வந்தவர்கள் என்பதால் தொடர்ந்து வாய்ப்பு தேடும் பலருக்கும் அவர்கள் வாய்ப்புகளை வழங்கி வந்தனர்,
பிரபலமான சித்ரா:

இப்படியாகத்தான் கே.எஸ் சித்ராவிற்கும் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது கே.எஸ் சித்ரா பள்ளி பருவத்திலேயே நன்றாக பாடும் திறனை பெற்றிருந்தார். அதனால் கல்லூரி படிக்கும் காலங்களிலேயே தமிழ் சினிமாவில் பாடத் துவங்கி விட்டார் அப்படி சித்ரா பாடிய பல பாடல்கள் மிகவும் பிரபலமானவை.
சொல்ல போனால் அப்போதைய காலகட்டத்தில் சித்ராவிற்கு தனியாக ரசிகர் பட்டாளமே இருந்தது என கூறலாம் இத்தனைக்கும் இப்போதே இருக்கும் அளவிற்கு பாடல் பாடுபவர்களை எல்லாம் பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்கள்.
சித்ராவிற்கு நடந்த நிகழ்வு
இருந்தாலும் கூட சித்ரா மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். நான் ஒரு சிந்து காவடி சிந்து என்கிற பாடல் தனது வாழ்வில் மறக்க முடியாத பாடல் என்று கூறுகிறார் சித்ரா ஏனெனில் அன்று அந்த பாடலை பாடி கொண்டிருந்த பொழுது அதற்கு மறுநாள் அவருக்கு தேர்வு இருந்தது. எனவே பாடலை பாடிவிட்டு கிளம்ப இருந்த சித்ராவிடம் இன்னும் ஒரு பாடல் பாட வேண்டும். அதையும் இருந்து பாடிவிட்டு செல்கிறாயா என்று கேட்டிருக்கிறார் இளையராஜா.

அப்பொழுது சித்ரா இல்லை நாளை எனக்கு கல்லூரி தேர்வு இருக்கிறது எனவே நான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறி இருக்கிறார். அப்பொழுது இளையராஜா கல்லூரி தேர்வை விட்டு விடு அதை விடவும் இந்த சினிமா உன்னை பெரிதாக வளர்த்து விடும் என்று கூறியிருக்கிறார்.
பிறகு சித்ரா அவர்கள் வீட்டில் பேசும்பொழுது இளையராஜாவே கூறும்போதுஅதற்கு ஆட்சேபனை சொல்ல முடியாது என்பதால் அவர்களும் ஒப்பு கொண்டனர் இதனால் சித்ரா அந்த தேர்வை எழுதவில்லை அதன் பிறகு சித்ராவின் படிப்பே நின்று போனது. ஏனெனில் அதன் பிறகு அதிகமாக பாடல் வாய்ப்புகள் அவருக்கு வரத் துவங்கி விட்டன என்று சித்ரா தனது பேட்டியில் கூறி இருக்கிறார்.