Cinema History
மொக்கை படமாதான் இருக்கு… இருந்தாலும் செய்றேன்.. பாரதிராஜா படத்திற்கு உயிரை கொடுத்து இசையமைத்த இளையராஜா!.. எந்த படம் தெரியுமா?.
Ilayaraja and Bharathiraja : தமிழில் அறிமுகமான நாள் முதல் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை எடுத்து வந்தவர் பாரதிராஜா. அதனால்தான் இப்போது வரை மக்கள் மத்தியில் வெகுவாக பேசப்படும் ஒரு இயக்குனராக அவர் இருந்து வருகிறார்.
பொதுவாக பாரதிராஜா இயக்கும் திரைப்படங்களில் அவரை சுற்றியுள்ளவர்கள் ஏதாவது ஒரு தவறு கூறினால் அது என்னவென்று பார்த்து அது உண்மையிலேயே தவறாக தெரிந்தால் அதை சரி செய்து கொள்வார் பாரதிராஜா.
ஆனால் ஒரு திரைப்படத்தில் மட்டும் அப்படி எந்த ஒரு விஷயத்தையும் சரி செய்ய தயாராக இல்லை பாரதிராஜா. அது வேறு எந்த திரைப்படமும் இல்லை முதல் மரியாதை என்கிற சிவாஜிகணேசன் நடித்த திரைப்படம்தான் அது. திருமணமான கதாநாயகன் வேறொரு பெண் மீது காதல் கொள்வதாக திரைப்படத்தை எடுத்திருந்தாலும் அதை மக்கள் ஏற்கும் வகையில் எடுத்திருந்தார் பாரதிராஜா.
இருந்தாலும் அந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அதுக்குறித்து அதிக விமர்சனங்கள் வந்தது. முக்கியமாக அந்த படத்தை பார்த்த இளையராஜா இந்த படத்தை மாற்றி எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இருந்தாலும் அதை காது கொடுத்து கேட்கவில்லை பாரதிராஜா. இந்த நிலையில் படத்திற்கான இசையமைக்கும் வேலை இளையராஜாவிற்கு வந்த பொழுது அதில் எந்த ஒரு மாற்றத்தையும் பாரதிராஜா செய்யாததை இளையராஜா கண்டு கொண்டார்.
இருந்தாலும் கூட பாரதிராஜாவிடம் எந்த ஒரு விஷயமும் பேசாமல் படத்தை மெருகேற்றுவதற்கு இன்னும் சிறப்பாக இசையமைத்து பார்ப்போம் என்று முடிவு செய்தார் இளையராஜா. படத்தின் கடைசி 20 நிமிடங்களில் மிகவும் அமைதியாக போகும். அந்த இடத்தில் இளையராஜாவின் இசை தான் பேசும் என்கிற நிலை இருந்தது. எனவே ஒரு நாள் முழுக்க மெனக்கெட்டு அந்த படத்திற்கு இசையமைத்தார் இளையராஜா.
பொதுவாக இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் எந்த ஒரு திரைப்படத்திற்கும் இசையமைக்கும் இளையராஜா இந்த ஒரு திரைப்படத்திற்கு மட்டும் பதினாறு மணி நேரம் அமர்ந்து இசையமைத்திருக்கிறார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்