Tamil Cinema News
உனக்கு நாள் முடிஞ்சுட்டு கிளம்பு கிளம்பு.. சின்ன குயில் சித்ராவை வம்பு செய்த இளையராஜா..!
தமிழ் சினிமாவில் பாடலாசிரியர்கள் எப்பொழுதுமே கொஞ்சம் கிண்டல் தனமான விஷயங்களை செய்யக்கூடியவர்கள். நிறைய விஷயங்களை பாடல் வரிகளின் மூலம் எளிதாக மக்களுக்கு வெளிப்படுத்தி விடுவார்கள்.
சில இடங்களில் ஒரு பாடல் வரியின் மூலமாகவே பெரிய அரசியல் விஷயங்களை கூட பாடல் ஆசிரியர்கள் பேசி விடுவார்கள். ஆனால் இசையமைப்பாளர்கள் கூட அந்த மாதிரியாக செய்த சம்பவம் ஒன்று தமிழ் சினிமாவில் நடந்திருக்கிறது.
அப்படியான ஒரு விஷயத்தைதான் இசையமைப்பாளர் இளையராஜா செய்து இருக்கிறார். இளையராஜா ஆரம்பத்தில் ராஜ்கிரனின் எல்லா படங்களுக்கும் இசையமைத்து வந்தார். ராஜ்கிரனை பொறுத்தவரை இளையராஜா இசையமைத்தால் அந்த பாடல் நல்ல வெற்றியை கொடுக்கும் என்று கருதினார்.
இளையராஜா செய்த வேலை:
அந்த சமயத்தில்தான் பாடகி சொர்ணலதா தொடர்ந்து வரவேற்பை பெற்று வந்தார். இதனால் இளையராஜாவும் தனது பாடல்களில் ஸ்வர்ணலதாவை பாட வைக்க நினைத்தார்.
ராஜ்கிரண் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் என் ராசாவின் மனசிலே. இந்த திரைப்படத்தில் அனைத்து பாடல்களுமே நல்ல வெற்றியை கொடுத்தன. இந்த படத்தில் குயில் பாட்டு என்கிற ஒரு பாடலை சொர்ணலதாவை வைத்து பாட வைத்தார் இளையராஜா.
அப்பொழுது அந்த பாட்டுக்கான பாடல் வரிகளையும் இளையராஜாவே எழுதினார். அவ்வாறு எழுதும் பொழுது அப்போதைய சமகாலத்தில் இருந்த ஒரு விஷயத்தை அதில் பதிவு செய்திருந்தார்.
அதாவது சொர்ணலதா வளர்ச்சி பெற துவங்கிய பொழுது சின்ன குயில் சித்ராவிற்கு சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும் என்று பேச்சுக்கள் இருந்தன. அதை குறிப்பிடும் வகையில் குயிலே நீ போ, இனிமேல் நான் தானே என்று பாடல் வரிகளை வைத்து அதை ஸ்வர்ணலதாவை வைத்து பாட வைத்தார் இளையராஜா.