Cinema History
ஓடாத படத்துக்கெல்லாம் காசு வாங்க மாட்டேன்!.. சிவாஜி கணேசனை கலாய்த்து அனுப்பிய இளையராஜா!..
தமிழ் சினிமா நடிகர்களிலேயே மிகவும் பிரபலமானவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிப்பை பொறுத்தவரை எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை சிறப்பாக நடித்துக்காட்ட கூடியவர் நடிகர் சிவாஜி கணேசன்.
இதனால் இந்திய அளவில் இருந்த நடிகர்கள் பலருமே சிவாஜி கணேசனை பார்த்து வியந்தனர். அப்போது அமெரிக்க அதிபர் கென்னடி வரை சிவாஜியின் நடிப்பை கண்டு வியந்து அவரை அமெரிக்காவிற்கு அழைத்து கௌரவித்துள்ளார். அந்த அளவிற்கு பெருமைக்குட்ப்பட்ட சிவாஜி கணேசன் இசைஞானியிடம் கலாய் வாங்கிய சம்பவங்களும் நடந்தன.
பாரதிராஜா அப்போது தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட சினிமாக்களை எடுத்து வந்தார். அந்த சமயத்தில்தான் பாரதிராஜா முதல் மரியாதை படத்தின் கதையை எழுதினார். இந்த படத்தின் கதையே மிகவும் சிக்கலானது என கூறலாம்.

ஊரில் மரியாதையான ஒரு மனிதர். ஆனால் அவருக்கு வாய்த்த மனைவி சரியாக இல்லை. இதனையடுத்து அவருக்கு அங்கு பரிசல் ஓட்டும் ஒரு இளம் பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது. அப்போதைய சினிமாவில் விதவை பெண்ணுக்கு திருமணம் ஆகும்படி காட்சி வைத்தாலே அந்த படம் ஓடாது.
அப்படி ஒரு காலக்கட்டத்தில் இப்படி ஒரு கதையை யோசித்திருந்தார் பாரதிராஜா. இந்த கதையை சிவாஜி கணேசன் நடித்தது மேலும் பெரும் விஷயமாக இருந்தது. இந்த நிலையில் இந்த படத்திற்கு இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் பாரதிராஜா.
ஆனால் படத்திற்கு இசையமைக்க மறுத்துவிட்டார் இளையராஜா. இந்த படம் ஓடாது என அவரும் கூறினார். இதனால் சிவாஜிகணேசனை அனுப்பி இசையமைக்குமாறு கேட்க சொன்னார் பாரதிராஜா. சிவாஜி கணேசனே கேட்ட பிறகு மறுக்க முடியுமா? எனவே அந்த படத்திற்கு இசையமைத்து கொடுத்தார் இளையராஜா.

ஆனால் அதற்கு காசு கொடுத்தப்போது அதை வாங்க மறுத்துவிட்டார். ஓடாத படத்திற்கு எல்லாம் நான் காசு வாங்க மாட்டேன் என கூறினார் இளையராஜா. கிட்டத்தட்ட மொத்த திரையுலகமும் அப்போது அந்த படம் ஓடாது என்றே நினைத்தது. ஆனால் அனைவரது எண்ணத்தையும் தாண்டி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது முதல் மரியாதை.
இப்படி எடுத்தால்தான் மக்கள் பார்ப்பார்கள் என நினைத்த சினிமாக்காரர்களின் மனதை மாற்றி அமைத்த படமாக அது இருந்தது.
