Connect with us

இதை முடிக்கலைனா படத்தை ரிலீஸ் பண்ண முடியாது… கடைசி நேரத்தில் விஜயகாந்த் படத்தில் கை வைத்த இளையராஜா!.. அதுதான் மாஸ்!..

ilayaraja vijayakanth

Cinema History

இதை முடிக்கலைனா படத்தை ரிலீஸ் பண்ண முடியாது… கடைசி நேரத்தில் விஜயகாந்த் படத்தில் கை வைத்த இளையராஜா!.. அதுதான் மாஸ்!..

Social Media Bar

Vijayakanth and Ilayaraja: தமிழ் சினிமாவில் வரிசையாக ஹிட் கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் விஜயகாந்த். போலீசாக நடிக்க துவங்கிய பிறகு அவர் எத்தனை திரைப்படங்களில் போலீசாக நடித்தாலும் அதை பார்ப்பதற்கு ரசிகர்கள் தயாராக இருந்தனர். அந்த அளவிற்கு விஜயகாந்த் போலீசாக நடிக்கும் திரைப்படத்திற்கு மார்க்கெட் அதிகமாக இருந்தது.

அப்படியே விஜயகாந்த் போலீசாக நடித்து சிறப்பாக பேசப்பட்ட திரைப்படங்களில் புலன் விசாரணை திரைப்படமும் முக்கியமான திரைப்படமாகும். இயக்குனர் ஆர்.கே செல்வமணியின் முதல் திரைப்படம்தான் புலன் விசாரணை. புலன் விசாரணை கதைக்களமே மற்ற திரைப்படங்களில் இருந்து வித்தியாசமானதாக இருக்கும்.

இருந்தாலும் அப்பொழுது விஜயகாந்த் நிறைய புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வந்ததால் ஆர்.கே செல்வமணிக்கு அந்த திரைப்படத்திற்கான வாய்ப்பை கொடுத்தார். திரைப்படத்தை குறித்த நேரத்தில் முடிப்பதில் ஆர்.கே செல்வமணிக்கு நிறைய பிரச்சனைகள் இருந்தது.

pulan visaranai
pulan visaranai

ஏனெனில் இதுதான் அவருக்கு முதல் படம் என்பதால் சரியான நேரத்தில் முடிக்க முடியவில்லை. இன்னும் நான்கு நாட்களில் திரைப்படம் வெளியாக வேண்டும் என்கிற நிலையில் அப்பொழுதுதான் படப்பிடிப்பை முடித்து இருந்தார் ஆர்.கே செல்வமணி.

இந்த நிலையில் படத்திற்கான இசை என்பது போடப்படாமலேயே இருந்தது. புலன் விசாரணை திரைப்படத்தைப் பொறுத்தவரை அதிகமாக பாடல்கள் கிடையாது என்றாலும் படம் முழுக்க பின்னணி இசை என்பது இருக்க வேண்டும். இந்த நிலையில் வேக வேகமாக இளையராஜாவிடம் சென்று பின்னணி இசை முடித்து தரவேண்டும் என்று கேட்டிருக்கிறார் ஆர்.கே செல்வமணி.

அப்படியும் கூட தயங்காத இளையராஜா அமர்ந்து மூன்றே நாட்களில் படத்திற்கான பின்னணி இசையை முழுவதுமாக முடித்து கொடுத்து இருக்கிறார். அதை இளையராஜாவை தவிர வேறு யாராலும் செய்ய முடியாது என்று ஆர்.கே செல்வமணி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

To Top