Cinema History
என்ன மாதிரி ஒரு அப்பாவை என் பிள்ளைங்க சகிச்சிக்கிட்டாங்க!.. செய்த தவறுகளை ஒப்புக்கொண்ட இளையராஜா!..
Ilayaraja: தன் இளமை காலங்கள் முழுக்க தமிழ் சினிமாவிற்கு பாடல்களை இசையமைப்பதே வேலையாக கொண்டிருந்தவர் இசையமைப்பாளர் இளையராஜா. இளையராஜா இசையமைத்தாலே அந்த படம் ஹிட் அடிக்கும் என்பதால் அவரது பாடல்களுக்கு வரவேற்பு அதிகமாகவே இருந்தது.
அவர் ஒரே நாளில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்த காலமெல்லாம் உண்டு. ஆனால் அப்போதைய சமயத்தில் தனது குடும்பத்தை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என்று கவலை தெரிவிக்கிறார் இசையமைப்பாளர் இளையராஜா. இது குறித்து ஒரு மேடையில் அவர் பேசும்போது ஒரு இசையமைப்பாளராக ஆன பிறகு நான் வீட்டுக்கு செல்வதே கடினம் என்கிற நிலை ஏற்பட்டது.
அப்பொழுது எனது தாயோ எனது மனைவியும் எனது பிள்ளைகளும் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். எப்போதுமே எனது வேலைப்பளுவை புரிந்து கொண்டார்களே தவிர அவர்கள் என்னை தொல்லை செய்ததே கிடையாது. எனது தாயையும் மனைவியையும் கூட பெரியவர்கள் என்பதால் அவர்கள் புரிந்து கொண்டார்கள் என ஒப்புக் கொள்ளலாம்.

ஆனால் குழந்தைகளாக இருந்த என்னுடைய பிள்ளைகள் நான் அதிக வேலைப்பளுவில் இருப்பதை புரிந்து கொண்டு எனக்கு ஆதரவாக இருந்தது என்னால் மறக்கவே முடியாதது என்று மேடையில் பேசியிருக்கிறார் இளையராஜா.
வெளிநாடுகளுக்கு செல்லும்போது மட்டும்தான் என் பிள்ளைகளுடன் நான் இருப்பேன் மற்ற நேரங்களில் எல்லாம் அவர்களுடன் இருக்கவே மாட்டேன் எப்போதாவது ஒருமுறைதான் வீட்டிற்கு செல்வேன் இருந்தாலும் அவர்கள் என்றுமே நான் அவர்களுடன் இல்லை என்று கூறி அதை ஒரு குறையாக கூறியது கிடையாது. அவர்களுக்கென்று நான் எதுவுமே செய்தது கிடையாது என்கிறார் இளையராஜா.
