ஆர்யா சொத்துகள் மீது வரிமான வரித்துறை சோதனை.. சொத்து சேர்ப்பால் வந்த பிரச்சனை..!
நடிகர்கள் நடிப்பு தொழிலை தாண்டி வேறு தொழில்களும் செய்வது உண்டு ஏனெனில் சினிமாவில் எப்பொழுதுமே மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்ள முடியாது.
எனவே பணம் வருகிற காலகட்டத்தில் அதை வேறு தொழில்களில் முதலீடு செய்து பணம் ஈட்டுவதை பல நடிகர்கள் செய்து வருகின்றனர். பெரும்பாலும் மக்களுக்கு இவர்கள் செய்யும் மற்ற தொழில்கள் குறித்த தகவல்கள் தெரியாது.
இந்த மாதிரியே நடிகர் ஆர்யா சென்னையில் உள்ள சில ஹோட்டல்களை வாங்கி நடத்தி வருகிறார். சமீபத்தில் நடிகர் ஆர்யாவின் சொத்துக்கள் குறித்து வருமான வரித்துறை சோதனை நடத்த முடிவு செய்திருக்கிறது.
அதனை தொடர்ந்து ஆர்யாவின் வீட்டிற்கு சென்ற பொழுது அவர் ஊரில் இல்லை என்பது தெரிந்துள்ளது. எனவே அவர் நடத்தும் நிறுவனங்கள் மீது சோதனையை துவங்கி இருக்கிறது. கணக்கில் காட்டாத சொத்துக்கள் ஆர்யாவிடம் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதற்காகதான் இந்த வருமான வரி சோதனை அதிரடியாக நடந்து வருகிறது இதனை தொடர்ந்து ஆர்யா நடத்திவரும் மூன்று ஹோட்டல்களில் நேற்று வருமானவரி சோதனை செய்யப்பட்டுள்ளது.