இந்தியன் 2 கன்பார்ம் – அடுத்த பான் இந்தியா படத்திற்கு தயாராகிறது தமிழ்நாடு

உலக அளவில் இந்திய சினிமா என பார்க்கும்போது பெரும்பாலான மக்கள் பாலிவுட் சினிமாவையே மொத்த இந்தியாவிற்கான சினிமா துறையாக கருதுகின்றனர். அதற்கு ஏற்றாற் போல பாலிவுட் சினிமாவும் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து இருந்தது. ஆனால் தற்சமயம் உலக அளவில் ஹிட் கொடுக்கும் படங்கள் தென்னிந்தியாவில் இருந்து அதிகமாக வர துவங்கியிருக்கின்றன.

கே.ஜி.எஃப் 2, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் 1000 கோடி வசூல் சாதனை செய்ததோடு வெளிநாட்டு மக்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டன. இந்த நிலையில் அடுத்த பான் இந்தியா படமாக கமல் நடித்து இயக்குனர் சங்கர் இயக்கும் இந்தியன் 2 இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக படத்தின் வேலைகள் பாதியிலேயே நின்றது. இதையடுத்து நடிகர் கமல்ஹாசனும் விக்ரம் திரைப்படத்தை நடிக்க வந்துவிட்டதால் இந்தியன் 2 படம் வருமா? என்பதே கேள்விக்குறியாக இருந்தது.

விக்ரம் திரைப்படம் வெளியான பிறகு இந்தியன் 2 படம் பற்றிய பேச்சுக்கள் இருந்து வந்தன.

இந்நிலையில் விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த சூர்யா இயக்குனர் சங்கரின் இந்தியன் 2 திரைப்படத்திற்காக வெகுவாக காத்துக்கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார். அதே சமயம் நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டா பக்கத்தில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் துவங்கும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்க போகிறார் என கூறப்பட்டுள்ளது.

இதனால் இந்தியன் 2 திரைப்படத்தை எப்படி இருந்தாலும் நாம் அடுத்து வருடத்தில் எதிர்ப்பார்க்கலாம் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Refresh