News
என் படத்துக்கு கூட இவ்வளவு ப்ரோமோஷன் பண்ணுனது இல்ல – மனைவி குறித்து புகாரளித்த உதயநிதி
தமிழ் சினிமாவில் நடிகர் என்பதையும் தாண்டி முக்கியமான திரைப்பட வெளியீட்டளாராக இருந்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இறுதியாக அவர் நடித்து வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் தமிழ் சினிமாவில் வெகுவாக பேசப்பட்ட திரைப்படமாக இருந்தது.

தற்சமயம் அவர் வெளியிடும் திரைப்படங்கள் அனைத்திற்கும் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு ப்ரோமோஷனுக்காக பேசி வருகிறார். ஏற்கனவே டான் திரைப்பட விழாவில் கலந்துக்கொண்டு பேசி இருந்தார். தற்சமயம் சந்தானம் நடித்து வெளியான குலுகுலு திரைப்படத்திற்காகவும் கூட பேசியிருந்தார்.
சில நாட்களுக்கு முன்பு கலாட்டா யு ட்யூப் சேனலில் பேட்டி ஒன்றில் கலந்துக்கொண்டிருந்தார். இதில் உதயநிதி மற்றும் அவரது மனைவி கிருத்திகா உதயநிதி ஆகியோர் கலந்துக்கொண்டனர். கிருத்திகா தற்சமயம் பேப்பர் ராக்கெட் எனும் வெப் சீரிசை இயக்கியுள்ளார். இந்த வெப் சீரிஸின் ப்ரோமஷனுக்காக இந்த பேட்டி தயார் செய்யப்பட்டிருந்தது.
அந்த பேட்டிக்கு வரும்போது உதயநிதி பேப்பர் ராக்கெட்கள் வரைந்த ஒரு சட்டையை போட்டிருந்தார். இதுக்குறித்து கூறும்போது “நானே தயாரித்த நானே நடித்த திரைப்படங்களுக்கு கூட ப்ரோமோஷனுக்காக இப்படியெல்லாம் சட்டை போட்டு வந்ததில்லை. ஆனால் என் மனைவி அவரது பட ப்ரோமோஷனுக்காக இந்த சட்டையை வாங்கி போட்டு என்னை அழைத்து வந்துள்ளார்” என கேலியாக கூறியுள்ளார்.
சமீப காலமாக உதயநிதி ஜாலியாக அனைவரிடமும் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
