நான்கு முக்கிய தமிழ் இயக்குனர்களின் காம்போவில் ஒரு திரைப்படம்

தமிழில் வித்தியாசமான திரைப்படங்கள் எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. முன்பெல்லாம் திரைப்படம் என்றாலே அதில் சில விஷயங்கள் அடிப்படையாக இருக்க வேண்டும் என இருந்தது. படத்தில் கதாநாயகி, காமெடியன், பாடல்கள் இவை எல்லாம் அடிப்படை கூறுகளாக இருந்தன. ஆனால் வளர்ந்து வரும் தமிழ் திரையுலகம் அதையெல்லாம் தாண்டி வந்துக்கொண்டிருக்கிறது. தற்சமயம் இவையெல்லாம் இல்லாமல் கூட திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகின்றன.

அதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஓ.டி.டி தளங்களும் வித்தியாசமான பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. ஏற்கனவே நெட்ப்ளிக்ஸ் தயாரிப்பில் தமிழின் முக்கிய இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் கூட்டமைப்பில் நவரசா என்கிற திரைப்படம் வெளியானது. தற்சமயம் அதே போல சோனி லிவ் ஓடிடி தளாமானது விக்டிம் என்கிற திரைப்படத்தை வெளியிட உள்ளது.

அந்தாலஜி என அழைக்கப்படும் இந்த வகை படங்கள் தற்சமயம் அதிகரித்து வருகின்றன. இயக்குனர் சிம்பு தேவன், எம்.ராஜேஷ், பா.ரஞ்சித் மற்றும் வெங்கட் பிரபு, இவர்கள் நால்வரும் இணைந்து நான்கு குறும்படத்தை இயக்கியுள்ளனர்.

இந்த நான்கு குறும்படமும் சேர்த்து ஒரே படமாக விக்டிம் என்கிற பெயரில் வெளியாக உள்ளது.

See also  சரத்குமார் யுவன் காம்போ - விரைவில் பாடல்கள்

இதில் பிரசன்னா, அமலா பால், பிரியா பவானி சங்கர், நாசர், தம்பி ராமய்யா, நடராஜ் இன்னும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படம் நாளை ஆகஸ்ட் ஐந்தாம் தேதி சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக இருக்கிறது.

Leave a Reply