Latest News
ஒரே மெட்டுல ஏ.ஆர் ரகுமான், தேவா இருவரும் போட்டி போட்டு போட்ட பாடல்.. எல்லாமே ஹிட்டு!..
நம்மில் பலரும் சற்று கோகமாக இருந்தாலோ அல்லது மன அழுத்தத்தில் இருந்தாலோ நமக்கு பிடித்த பாடலைக் கேட்டு மனதை ஆறுதல் படுத்துக் கொள்வோம். அந்த வகையில் இசை என்பது நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் முக்கிய அங்கமாக இருக்கிறது.
சந்தோசம், சோகம், துக்கம் எல்லா நிகழ்விற்கும் நம் வாழ்க்கையோடு சில பாடல்கள் ஒன்றிப்போய் இருக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் சில இசையமைப்பாளர்கள் இசையமைத்த சில பாடல்கள் நம் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்.
90ஸ் காலகட்டத்தில் வெளிவந்த பல பாடல்கள் தற்பொழுது வரை அனைவராலும் ரசிக்கப்பட்டு வரும் பாடல்களாக அமைந்திருக்கும். அந்த வகையில் ஏ. ஆர். ரகுமான், தேவா போன்ற பல இசையமைப்பாளர்கள் இசையமைத்த பல பாடல்கள் தற்பொழுது வரை அனைவருக்கும் ஃபேவரெட் பாடல்களாக இருக்கும்.
இந்நிலையில் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு இசையமைத்த பாடல்கள் வெற்றி பெற்றதைப் பற்றி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது அதனைப் பற்றி காண்போம்.
தமிழ் சினிமாவின் இசை ஜாம்பவான்கள்
ஏ. ஆர். ரகுமான் மற்றும் தேவா ஆகிய இருவரும் தங்களுடைய தனித்துவமான இசை திறமையின் மூலம் பல பாடல்களுக்கு இசையமைத்து அந்த பாடல்களும் வெற்றி பெற்றிருக்கும்.
மேலும் இவர்கள் இசையமைத்த பாடல்கள் நிச்சயம் தற்பொழுது வரை இளைஞர்களின் பிளே லிஸ்டில் இடம் பெற்று இருக்கும். கானா பாடலுக்கு என்றுமே தேவாவை அடித்துக் கொள்ள முடியாது. மேலும் மெலோடி காதல் பாடலுக்கு ஏ ஆர் ரகுமான் இசையை அடித்துக் கொள்ள முடியாது.
மேலும் இருவரும் தங்களின் வழக்கமான இசைகளை மாற்றி புதுமையாக பல குத்து பாடல்களுக்கும், மெலோடி பாடல்களுக்கும் இசையமைத்து அதிலும் வெற்றி கண்டு இருக்கிறார்கள்.
அந்த வகையில் அடுத்தடுத்த ஆண்டு இருவரின் இசையிலும் வெளிவந்த ஒரே மாதிரியான பாடல்கள் வெற்றி பெற்றதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
ஏ. ஆர். ரகுமான் மற்றும் தேவா இருவரும் போட்டி போட்டு போட்ட பாடல்
ஏ. ஆர். ரகுமானிடம் ஒரு முறை தேவா இசையில் தங்களுக்கு பிடித்த பாடல் எதுவென்று கேட்க அதற்கு அவர் “கொஞ்ச நாள் பொறு தலைவா” என்ற பாடலை கூறியிருக்கிறார்.
இந்தப் பாடல் நடிகர் அஜித் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த “ஆசை” திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும். ஆனால் இந்தப் பாடல் வருவதற்கு காரணமே ஏ. ஆர். ரகுமானின் இசைதான். 1994 ஆம் ஆண்டு டூயட் என்ற திரைப்படத்தில் “மெட்டுப்போடு மெட்டுப்போடு” என்ற பாடலின் மோட்டிவேஷன் தான் ஆசை படத்தில் தேவா இசையமைத்திருப்பது.
இரண்டுமே “ஆனந்த பைரவி ராகம்” கொண்டது. மேலும் இசையமைப்பாளர் தேவா டூயட் படத்திலிருந்து இன்ஸ்பிரேஷன் ஆக ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும் என பார்த்தால், டூயட் படத்தை இயக்கியது பாலச்சந்தர். ஆசை படத்தை இயக்கியது வசந்த். பாலச்சந்தரின் வசந்தின் குரு ஆவார். எனவே குருவின் படத்தில் உள்ள தோரணை தன் படத்தில் வர வேண்டும் என்பதற்காக இசையமைப்பாளர் தேவாவிடம் வசந்த் கேட்டிருக்கலாம்.
மேலும் ஆனந்த பைரவி ராகத்தில் 1994 ஆம் ஆண்டு வந்த டூயட் பாடத்தில் வந்த மெட்டுக் கொடு பாடல் மோட்டிவேஷன் பாடலாகவும் ஆசை படத்தில் வந்த பாடல் காதல் பாடலாகவும் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்தது.
மேலும் “ஆனந்த பைரவி ராகம் ” இசையமைப்பாளர் தேவாவிற்கு பிடித்துப் போக அவர் 1995 ஆம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த “திருமூர்த்தி ” என்ற படத்தில் “செங்குருவி ” பாடலை இசையமைத்திருப்பார்.
தற்பொழுது வரை அந்தப் பாடல் பல ரசிகர்களின் ஃபேவரட் லிஸ்டில் இருக்கும். இதனை காப்பி என்று கூற இயலாது. இன்ஸ்பிரேஷன் என்று நினைத்துக் கொள்ளலாம் என பலரும் சமூக வலைதளத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்