Latest News
புலன் விசாரணை வர்றதுக்கு காரணமா இருந்த ரெண்டு நிஜ போலீஸ்… கேட்கவே ஆச்சரியமா இருக்கே.. லிஸ்ட் போட்ட இயக்குனர் ஆர்.கே செல்வமணி!.
Pulan Visaranai: தமிழ் சினிமாவில் ஆக்சன் ஹீரோ என்றால் அது கேப்டன் விஜயகாந்த் தான். சினிமாவில் மட்டும் நடிகராக இல்லாமல் நிஜத்திலும் நடிகராக வாழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த்.
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ஆக்சன் ஹீரோவாக நடித்து ரசிகர்களின் மனதில் இன்றளவும் நீங்காத இடம் பிடித்துள்ளார் விஜயகாந்த்.
சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் கேப்டன் விஜயகாந்த். சமீபத்தில் அவரின் இறப்புச் செய்தி கேட்டு தமிழகத்தில் உள்ள மக்கள் ஆழ்ந்த துயரத்தை அடைந்தனர்.
புலன் விசாரணை
இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் மற்றும் சரத்குமார் நடித்திருந்தனர். மேலும் எம் என் நம்பியார் ராதாரவி, ஆனந்த்ராஜ், ரூபினி, சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் டிஜிபியாக நேர்மையான ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
புலன் விசாரணை உண்மை சம்பவம்
புலன் விசாரணை திரைப்படம் உருவாகுவதற்கு இரண்டு நிஜ போலீஸ் அதிகாரி தான் காரணம் என சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் ஆர் கே செல்வமணி கூறியிருந்தார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது இந்த திரைப்படம் என்னை ஏதோ ஒரு வகையில் பாதித்த ஒரு திரைப்படம் எனவும் அவர் கூறியிருந்தார்.
சென்னை ட்ரிப்ளிகேன் அருகில் பச்சை தண்ணி மாணிக்கம் என்ற காவல் அதிகாரி இருந்ததாகவும், அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டேன். அவர் தன்னுடைய 30 வருட காவல்துறை வாழ்க்கையில் 200 பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பச்சை தண்ணி மாணிக்கம் போன்ற மற்றொரு காவல் அதிகாரி, தஞ்சாவூரில் ஹானஸ்ட் ராஜ் என்ற ஒரு காவல் அதிகாரியை பற்றியும் தெரியவந்தது.
எனவே பச்சைத்தண்ணி மாணிக்கம் என்ற ஒரு கேரக்டரை ஹானஸ்ட் ராஜ் என்ற பெயர் பொறுத்தி படத்தை எடுத்ததாக இயக்குனர் ஆர் கே செல்வமணி தெரிவித்துள்ளார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்