Connect with us

நீ இல்லன்னா வேற ஹீரோ இல்லையா எனக்கு.. விக்ரமிற்கு ஷாக் கொடுத்த பாலா!..

vikram bala

News

நீ இல்லன்னா வேற ஹீரோ இல்லையா எனக்கு.. விக்ரமிற்கு ஷாக் கொடுத்த பாலா!..

Social Media Bar

ஒரு சில இயக்குனர்களின் படங்கள் என்றால் தனியாக தெரியும் அளவிற்கு அவர்களின் இயக்கம் அந்த படத்தில் இருக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களின் படங்கள் வித்தியாசமாகவும் ரசிகர்களுக்கு பிடிக்கும் விதத்தில் இருக்கும்.

தற்போது பல இயக்குனர்களும் சர்ச்சையில் சிக்கிவரும் நிலையில் இயக்குனர் பாலா என்றால் மற்ற நடிகர், நடிகைகள் கூட நடிக்க தயங்குவார்கள். அந்த அளவிற்கு அவரின் இயக்கத்தில் உருவாகும் படங்கள் இருக்கும் என்று கூறினால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

அந்த வகையில் நடிகர் விக்ரம் நடித்த முதல் திரைப்படம் சேது. விக்ரமை தமிழ் மக்களிடையே பிரபலப்படுத்திய திரைப்படமாகும். இந்நிலையில் நடிகர் பாலா விக்ரமுக்கு செய்த சம்பவம் பற்றி மூத்த பத்திரிகையாளர் வி கே சுந்தர் கூறியிருப்பது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் விக்ரம்

நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய ஒரு நடிகர் என்றால் அவர் விக்ரம். இவரின் படங்கள் அனைத்தும் வித்தியாசமாகவும், தனித்துவமாகவும் மேலும் அந்த படத்திற்காக அவர் செய்யும் தியாகங்கள் என அனைத்தும் அந்தப் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமையும்.

chiyaanvikram

இந்நிலையில் தான் 1988 ஆம் ஆண்டு கைலாசம் பாலச்சந்தர் இயக்கிய கலாட்டா குடும்பம் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்திருந்தார். 1990 ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி எனும் படத்தின் மூலம் அறிமுகமானார்.

பிறகு 9 ஆண்டுகள் கழித்து இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த சேது என்ற படத்தில் முன்னணி நடிகராக நடித்து தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். விக்ரமை மக்களுக்கு அறிமுகப்படுத்திய திரைப்படம் என்றால் அது சேது. இந்த படத்தின் தாக்கம் தற்போது வரை மக்களை விட்டு நீங்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் இயக்குனர் பாலா என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். தற்போது சினிமாவில் விக்ரமிற்கு ஒரு நல்ல இடத்தை கொடுத்ததும் இந்த திரைப்படம் தான்.

இந்நிலையில் இயக்குனர் பாலா விக்ரமை வைத்து எடுத்த பிதாமகன் திரைப்படத்தை பற்றி ஒரு தகவல் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோபப்பட்டு ஆளை மாற்றிய பாலா

இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் வி கே சுந்தர் பிதாமகன் படத்தைப் பற்றி கூறும் போது, பிதாமகன் படத்தில் நடிக்க இயக்குனர் பாலா விக்ரமிடம் கால்ஷீட் கேட்டதற்கு விக்ரம் என்னுடைய மேனேஜரிடம் பேசிக் கொள்ளுங்கள் பாலா என்று கூறிவிட்டார்.

உடனே கோபப்பட்ட பாலா என்னிடம் நேரடியாக அவர் பேச மாட்டாரா? என்று விக்ரமின் கதாபாத்திரத்திற்கு நடிகர் முரளியை தேர்வு செய்து இருக்கிறார். இந்நிலையில் முரளிக்கு சம்பளம் 20 லட்சம் வரை பேசப்பட்டு அந்த படத்தின் வேலைகளை தொடங்க பாலா தயாராகி இருந்தார்.

director-bala

இந்நிலையில் இந்த விஷயம் நடிகர் விக்ரமுக்கு தெரிய வர திருநெல்வேலியில் சாமி படப்பிடிப்பில் இருந்த விக்ரம் உடனடியாக கிளம்பி வந்து பாலாவிடம் சரணடைந்துவிட்டார். ஏனென்றால் விக்ரம் இந்த அளவிற்கு வளர்ந்ததற்கு முக்கிய காரணம் பாலாவின் இயக்கத்தில் வந்த சேது திரைப்படம் தான். அதன் பிறகு பாலாவும் விக்ரமும் இணைந்து பிதாமகன் படத்தை உருவாக்கினார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் கூறியிருக்கும் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

To Top