News
மகாராஜா படத்துல நான் மட்டுமே கண்டுப்பிடிச்ச தப்பு… இன்னும் யாருக்கும் தெரியாது!.. சீக்ரெட்டை உடைத்த பார்த்திபன்..
தமிழ் சினிமாவில் தற்போது சர்ச்சைகளில் சிக்கி டிரெண்டிங்கில் இருப்பவர் இயக்குனர் மற்றும் நடிகரான பார்த்திபன். இவரைப் பற்றிய பேச்சு சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் வைரலாகி கொண்டிருக்கிறது.
மேலும் சமீபத்தில் கூட படத்தின் ப்ரமோஷன் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்த்திபன், நான் பேசுவதை பாதியாக வெட்டி பத்திரிக்கையில் எழுதுவதால் அதனால் பாதிக்கப்பட போவது நான் தான் என வருத்தமாக கூறியிருந்தார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் என்னை தகாத வார்த்தைகளால் முகம் தெரியாதவர்கள் திட்டுவதும் எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது என்றும் இதனால் எனக்கு இரவில் தூக்கம் வரவில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் மகாராஜா படத்தை பற்றி பார்த்திபன் கூறியிருக்கும், மற்றொரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகாராஜா திரைப்படம்
இந்த ஆண்டு தமிழ் மொழியில் வெளியான அதிரடி திரைப்படம் தான் மகாராஜா. இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ் ,நடராஜன் சுப்பிரமணியம், அபிராமி, அருள் தாஸ், முனீஷ்காந்த், மணிகண்டன், சிங்கம்புலி, பாரதிராஜா ஆகிய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தை நித்திலன் சுவாமிநாதன் இயக்கிருந்தார். மேலும் தி ரூட்திங் ஸ்டுடியோ மற்றும் ஃபேஷன் ஸ்டூடியோ இணைந்து தயாரித்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது

மேலும் விஜய் சேதுபதியின் 50-வது படமாக ஜூன் 14ஆம் தேதி வெளிவந்து ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றது மேலும் வசூல் ரீதியாகவும் நல்ல படமாக அமைந்தது.
மகாராஜா படம் குறித்து நடிகர் பார்த்திபன் தெரிவித்தது.
நடிகர் பார்த்திபன் மகாராஜா படத்தை பார்ப்பதற்கு ஐஸ்கிரீம் கேட்டு அழுகும் சின்னப்பிள்ளை போல் டிக்கெட் கிடைக்காத நிலையிலும் நான் திரையரங்கில் நின்று கொண்டாவது இந்த படத்தை பார்க்க வேண்டும் என படத்தை பார்க்கச் சென்றதாக கூறியுள்ளார்.
படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை எனவும், ஆனால் படத்தின் கதையில் எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அதனை நான் நித்திலன் சுவாமிநாதன் விளக்கினேன் எனவும், அதனை இதுவரை யாரும் கண்டு பிடிக்கவில்லை. நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள் என அவர் கூறினார். இவ்வாறாக பார்த்திபன் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
