News
மலையாளி என்கிற ஆணவத்தை அழித்த சிவாஜி!.. மோகன்லாலுக்கு நடந்த நிகழ்வு…
Actor Mohanlal: மலையாளத் திரை உலகின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் தான் மோகன்லால். இவர் மலையாள மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.
இவர் மலையாள சினிமாவிற்கு முக்கிய பங்கு அளித்ததற்காக இவருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருது வழங்கிய கௌரவித்தது இந்திய அரசு.
இவர் சமீபத்தில் மலையாள பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை பற்றி அவரின் கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
தமிழ் திரையுலகில் இன்றளவும் மறக்க முடியாத நடிகர்களில் ஒருவர்தான் சிவாஜி கணேசன். இவர் நடிகர் திலகம் என்னும் தமிழ் புனைபெயரை கொண்டு அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.
மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை படைத்தார்.

தமிழ் திரையுலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனை பற்றி மலையாள நடிகர் மோகன்லால் பகிர்ந்து உள்ள தகவல் நடிகர் திலகத்தின் மீது உள்ள மதிப்பை மேலும் உயரச் செய்துள்ளது.
மலையாளி என்னும் நான்
மலையாள பத்திரிக்கைக்கு நடிகர் திலகத்தைப் பற்றி சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து உள்ளார் மோகன்லால்.
அதில் நடிகர் திலகத்தின் அன்னை இல்லத்திற்கு மோகன்லால் சென்ற போது நடந்த சுவாரசியங்களை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக அவர் கூறியிருப்பார்
என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு என்றால் அது நடிகர் திலகத்தின் அன்னை வீட்டிற்கு நான் சென்றது தான்.
என் கையைப் பிடித்துக் கொண்டு அன்னை இல்லத்தில் உள்ளே பெரிய புகைப்படங்கள், நட்சத்திரங்கள் என அனைத்தையும் ஒவ்வொன்றாக காட்டி என்னிடம் விளக்கினார் நடிகர் திலகம்.
அவர் என் கைவிரலை பிடித்துக் கொண்டு நடந்த பொழுது என்னை நான் ஒரு குழந்தையாக நினைத்துக் கொண்டேன். அது என் வாழ்வில் ஒரு மறக்க முடியாத நிகழ்வாக இருந்தது.
சிவாஜி சார் ஷூட்டிங் வரும்போது எல்லாம் அங்கு இருப்பவர்கள் சற்று நேரம் எழுந்து நின்று அவருக்கு மரியாதை கொடுத்துவிட்டு பின்பு அமருவார்கள். அதை நான் பார்க்கும் பொழுது ஒரு மன்னன் நடந்து வருவதைப் போல நான் உணர்வேன்.

தமிழ் சினிமா துறையில் இவ்வளவு மதிப்பு மரியாதையும் உள்ள ஒரு நடிகர், மலையாளத்தில் நடிக்க வரும்போது மிகவும் எளிமையாக நடந்து கொண்டார். நானும் அவரைப் போன்று இருக்க வேண்டும் என அவ்வப்போது நினைத்துக் கொள்வேன்.
படப்பிடிப்பு தடைப்பட்டு விட்டால் அதனைக் குறித்து அவர் கருத்து எதும் தெரிவிக்காமல் முகம் சுளிக்காமல் அனைவரிடமும் விடை பெற்று மறுநாள் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் பொழுது சந்தோஷமாக அதில் கலந்து கொள்வார்.
மேலும் கேரளா வந்த பொழுது நடிகர் திலகம் என்னுடன் தங்கி இருந்தார். அவ்ளோ பெரிய மனிதர் ஆனால் குழந்தை மனம் கொண்டவர்.
ஒரு குழந்தை தனக்கு என்ன வேண்டுமோ அதனை அடம்பிடித்து கேட்பது போல நடிகர் திலகம் அவருக்கு வேண்டிய வாத்து கறி, போன்ற அசைவங்களை விரும்பி வாங்கி உண்பார். அவர் உண்பதை தன்னுடைய பணியாளர்களும் சாப்பிட வேண்டும் என நினைப்பார்.
திரையுலகில் மன்னனாக திகழ்ந்த நடிகர் திலகம் அவருக்கு பிடித்த பொருட்களை யார் கேட்டாலும் கொடுக்க மாட்டார். அவரின் குழந்தைகள் கேட்டால் கூட கொடுக்க மாட்டார். ஆனால் ஒரு முறை அவர் கையில் கட்டு இருந்த கடிகாரத்தை பார்த்து நான் நன்றாக உள்ளது என கூறினேன். உடனே அதனை அவர் கழட்டி என்னிடம் கொடுத்துவிட்டார்.
ஒருமுறை மலையாள இயக்குனர் பாலச்சந்திரனும், அவருடைய நண்பரும், சிவாஜி கணேசனை பார்க்க சென்ற பொழுது அவர்கள் விரும்பி கேட்டதற்காக கட்டபொம்மன் வசனத்தை எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் நடித்துக் காண்பித்தாராம்.
இவ்வளவு பெரிய நடிகரான சிவாஜி கணேசன் தன்னை தேடி வந்த விருந்தாளிகளுக்கு எப்பொழுதும் முக்கியத்துவம் கொடுப்பார். அவர்கள் என்ன கேட்டாலும் மறுக்காமல் அப்படியே செய்து விடுவாராம்.
அதுமட்டுமில்லாமல் அவர் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை நடிகர் திலகமும், அவரின் மனைவியும் காரின் அருகில் சென்று, காரின் கதவை திறந்து விட்டு உள்ளே உட்காரச் சொல்லித்தான் வழி அனுப்புவாராம்.
ஆனால் இது போன்ற ஒரு பண்பை நான் எந்த மலையாளிடமும் கண்டதில்லை.
நான் ஒருவரை தலைகுனிந்து வணங்கும் பொழுது என் மனதில் இருக்கும் மலையாளி குணம், நான் இவ்வளவு கீழே குனிந்து தலை வணங்க வேண்டுமா? என என்னிடம் கேட்கும் ஆனால் நான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி நினைக்கும் பொழுது என் தலை தானாக கீழே குனியும் என்று கூறினார்.
