நடிகர் சிம்பு தற்சமயம் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்று நிறைய திரைப்படங்களில் நடித்த வந்து கொண்டிருக்கிறார். இதற்கு நடுவே அவர் திட்டமிடும் படங்களை தாண்டி சில படங்களிலும் நடிப்பது உண்டு.
அதேபோல சிம்பு போன பிறந்தநாளின் பொழுது அவர் நடிக்க இருக்கும் பல படங்களுக்கான அப்டேட்களை கொடுத்திருந்தார். தொடர்ந்து வரிசையாக அந்த படங்களில் நடிப்பார் என்று நினைத்து வந்த நிலையில் திடீரென்று வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட் ஆகி இருக்கிறார் சிம்பு.
இந்த படத்தின் பெயர் அரசன் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் கதையானது வடசென்னை படத்தின் கதையோடு தொடர்புடையதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
சிம்புவின் அடுத்த படம்:
இந்த நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக ஏற்கனவே சிம்பு அட்வான்ஸ் தொகை ஒன்று வாங்கி இருந்தார். இந்த நிலையில் அவர் அந்த படத்தில் நடிக்காததால் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் சிம்பு இந்த விஷயத்தில் அமைதி பேச்சுவார்த்தைக்கு வந்ததாக பேச்சுக்கள் இருக்கின்றன. அதாவது ஐசரி கணேஷ் கேட்கும் கால்ஷீட் தருவது அல்லது அவர் கொடுத்த அட்வான்ஸ் திருப்பி கொடுப்பது என்ற நிலையில் சிம்பு இருக்கிறார். ஆனால் இன்னும் ஐசரி கணேஷ் அதற்கு எந்த ஒரு பதிலும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.