Connect with us

தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு நடிக்க கூடாது!.. வழக்கு தொடர்ந்த ஐசரி கணேஷ்!..

simbu

News

தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு நடிக்க கூடாது!.. வழக்கு தொடர்ந்த ஐசரி கணேஷ்!..

Social Media Bar

சிம்பு ஏற்கனவே மணிரத்தினம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் என்கிற திரைப்படத்தில் ஏற்கனவே நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்சமயம் தக் லைஃப் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முதலில் இந்த திரைப்படத்தில் சிம்பு நடிப்பதாக இல்லை.

சிம்புவுக்கு பதிலாக ஜெயம் ரவிதான் நடிக்க இருந்தார். ஆனால் ஏதோ காரணங்களால் ஜெயம் ரவி நடிக்க மறுத்ததால் சிம்பு படத்திற்குள் வந்தார். ஆனால் இந்த படத்திற்கு முன்பே வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கொரோனா குமார் என்கிற திரைப்படத்தில் கமிட் ஆகி இருந்தார் சிம்பு.

simbu
simbu

கொரோனா குமார் திரைப்படத்தை பொறுத்தவரை அந்த படத்தில் நடிப்பதற்கு ஏற்கனவே 9 கோடி ரூபாயை சிம்பு சம்பளமாக பேசியிருந்தார். சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கோகுல் இந்த திரைப்படத்தை இயக்க இருந்தார். இதற்காக ஏற்கனவே 4 கோடி ரூபாயை சம்பளமாக வாங்கியிருந்தார் சிம்பு.

ஆனால் அவர் கொரோனா குமார் திரைப்படத்தில் நடிக்கவே இல்லை. இதனால் சென்னை உயர்நீதி மன்றத்தில் இதுக்குறித்து வழக்கு தொடர்ந்தது வேல்ஸ் நிறுவனம். செப்டம்பர் 19 ஆம் தேதிக்குள் பணத்தை திரும்ப அளிக்க சிம்பு தரப்பில் உத்திரவாதம் அளிக்க வேண்டும்.

அப்படி அளிக்காத பட்சத்தில் சிம்பு மற்ற படங்களில் நடிக்க தடை விதிக்கப்படும் என உத்திரவிடப்பட்டது. இந்த நிலையில் தற்சமயம் சிம்பு தக் லைஃப் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து அவர் அந்த திரைப்படத்தில் நடிக்க கூடாது என ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்துள்ளார். இதனையடுத்து சிம்புவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

To Top