Connect with us

இந்த கலாய் தேவையா!… ஜெயம் ரவியை பங்கம் செய்த சயிண்டிஸ்ட்!..

Cinema History

இந்த கலாய் தேவையா!… ஜெயம் ரவியை பங்கம் செய்த சயிண்டிஸ்ட்!..

Social Media Bar

தமிழில் நிறைய உப்மா திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் சில படங்கள் பெரிய ஹீரோக்களை வைத்தே வந்துள்ளன. ஒரு திரைப்படத்தை தயாரிக்கும்போது அதில் முக்கியமான விஷயமாக ஆய்வு உள்ளது. படம் குறித்த பல விஷயங்களை அந்த துறை சார்ந்த நிபுணர்களிடம் ஆய்வு செய்ய வேண்டும்.

அதுவும் அறிவியல் சார்ந்து எடுக்கப்படும் படங்களில் முக்கியமாக இந்த விஷயங்கள் இருக்க வேண்டும். ஆனால் அது எதுவுமே இல்லாமல் தமிழில் வந்து மக்கள் மத்தியில் பங்கமாய் கலாய் வாங்கிய திரைப்படம்தான் ஜெயம் ரவி நடித்த டிக் டிக் டிக்.

இந்த படத்தை சக்தி செளந்தர் ராஜன் என்கிற இயக்குனர் இயக்கினார். விண்வெளியில் எரிசக்தியை ஆற்றலாக பயன்படுத்தி விண்கலனால் பறக்க முடியாது. காற்றைதான் ஆற்றலாக பயன்படுத்துவார்கள் என்கிற விஷயம் கூட தெரியாமல் காமெடி செய்து வைத்திருப்பார் இயக்குனர்.

இந்த நிலையில் சமீபத்தில் இஸ்ரோவில் மங்கள்யான், சந்திரயான் 1 போன்ற திட்டங்களில் திட்ட இயக்குனராக இருந்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையை ஒரு பிரபல யூ ட்யூப் சேனல் பேட்டி எடுத்தப்போது டிக் டிக் டிக் படத்தின் காட்சிகளை காட்டி அதை பற்றி அவரிடம் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த மயில்சாமி அண்ணாதுரை, ஒரு ஏரோஸ்பேஷ் இஞ்சினியரை கூட வைத்து கொண்டாவது படத்தை எடுத்திருக்கலாம். எதிர்காலத்திலாவது மக்கள் விழிப்படைவார்கள் என நம்புகிறேன் என கூறியிருந்தார்.

To Top