Connect with us

இழுபறியில் சென்று கொண்டிருக்கும் வாடிவாசல்!.. நடுவில் உள்ளே புகுந்த தனுஷ்!..

dhanush surya

News

இழுபறியில் சென்று கொண்டிருக்கும் வாடிவாசல்!.. நடுவில் உள்ளே புகுந்த தனுஷ்!..

Social Media Bar

Vetrimaaran: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகும் திரைப்படங்களுக்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் ஒரு பெரும் வரவேற்பு உண்டு. ஏனெனில் வெற்றிமாறன் இயக்கும் ஒவ்வொரு திரைப்படமும் வெறுமனே படம் என்பதை தாண்டி பல விஷயங்களை பேசக்கூடியதாக இருக்கிறது.

இந்த நிலையில் தற்சமயம் விடுதலை திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் வாடிவாசல். வாடிவாசல் என்கிற பெயரில் ஏற்கனவே வந்த நாவலை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாதான் கதாநாயகனாக நடிக்கிறார். ஏற்கனவே வணங்கான் திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருந்தது. ஆனால் இயக்குனர் பாலாவுடன் அவருக்கு ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக அந்த படத்தில் இருந்து விலகினார். இதனையடுத்து அந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய் கதாநாயகனாக நடித்தார்.

அதே போல தற்சமயம் வாடிவாசல் திரைப்படத்திலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனாலேயே இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்து கூட அப்டேட் எதுவும் வராமலே இருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறனுக்கும் சூர்யாவிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சூர்யா இந்த படத்தில் இருந்தும் விலகுவதாக கூறப்படுகிறது.

வழக்கம் போல வெற்றிமாறன் தனுஷை கதாநாயகனாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்க போகிறார் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன. இதனையடுத்து இழுபறியில் சென்றுக்கொண்டுள்ளது வாடிவாசல் திரைப்படம்.

To Top