Connect with us

சும்மா கதை கேட்டாரு! சொன்னதும் டைரக்டர் ஆக்குனாரு! – இயக்குனருக்கு வாழ்வளித்த சிவாஜி கணேசன்!

Cinema History

சும்மா கதை கேட்டாரு! சொன்னதும் டைரக்டர் ஆக்குனாரு! – இயக்குனருக்கு வாழ்வளித்த சிவாஜி கணேசன்!

Social Media Bar

தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு இயக்குனர் ஆகி இருப்பார்கள் ஒரு வாய்ப்பு கிடைக்காதா? என காத்திருப்பவர்கல் பல உண்டு. ஆனால் சிலருக்கு அதிர்ஷ்டவசமாக திடீரென வாய்ப்புகள் கிடைத்துவிடும். எனவே சினிமாவில் எப்போது என்ன நடக்கும் என நாம் அனுமானிக்கவே முடியாது.

அப்படி ஒரு வாய்ப்பை பெற்றவர்தான் இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரம். இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரத்திற்கு நடிகர் சிவாஜி கணேசனோடு நல்ல பழக்கம் இருந்தது. அப்போது அவர் சினிமாவிற்கு வந்த புதிசு. எனவே எந்த ஒரு படமும் அவர் இயக்கவில்லை.

அப்போது சிவாஜி ஓய்வு நேரங்களில் அவரிடம் கதை கேட்பார். ஏனெனில் வியட்நாம் வீடு சுந்தரம் நன்றாக கதை கூற கூடியவர். தினமும் அவரிடம் கதை கேட்கும் சிவாஜிக்கு ஒரு நாள் ஒரு கதை பிடித்துப்போனது. மீண்டும் மீண்டும் அந்த கதையை அவர் கேட்டார். பிறகு இதை நீ படமாக எடுத்தால் என்ன? என கேட்டுள்ளார்.

அந்த படத்தில் சிவாஜியே நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படியாக வியட்நாம் வீடு சுந்தரத்தின் முதல் படமான கெளரவம் படம் தயாராகி 1973 ஆம் ஆண்டு வெளியானது.

To Top