Connect with us

நான் அமெரிக்காவிற்கு போனதே இல்லைங்க!.. எல்லாம் பொய் சொல்றாங்க!. கடுப்பான ஜனகராஜ்!..

janagaraj

Cinema History

நான் அமெரிக்காவிற்கு போனதே இல்லைங்க!.. எல்லாம் பொய் சொல்றாங்க!. கடுப்பான ஜனகராஜ்!..

Social Media Bar

தமிழில் உள்ள பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ஜனகராஜ். ரஜினி கமலில் துவங்கி அப்போது தமிழில் பிரபலமாக இருந்த பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார் நடிகர் ஜனகராஜ்.

ஆரம்பத்தில் கதாநாயகன் ஆவதற்காகவே சினிமாவிற்கு வந்தார் ஜனகராஜ். ஆனால் அவருக்கு ஏற்பட்ட ஒரு விபத்தின் காரணமாக அதன் பிறகு அவர் நகைச்சுவை நடிகனாக நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இருந்தாலும் அந்த துறையிலும் தன்னுடைய தனித் திறமையை வெளிப்படுத்தி தனக்கான இடத்தை பிடித்தார் ஜனகராஜ்.

ரஜினி கமலின் 80ஸ் காலகட்டத்திற்கு பிறகு ஜனகராஜை சினிமாவில் அதிகமாக பார்க்க முடியவில்லை. இது குறித்து சினிமா பத்திரிகையாளர்கள் பேசும் பொழுது ஜனகராஜ் தற்சமயம் தமிழ்நாட்டில் இல்லை எனவும் அவர் அமெரிக்காவில் தன் மகனுடன் செட்டில் ஆகிவிட்டார் என்றும் பேசியிருந்தனர்.

அதனால் பலரும் அதுவே உண்மை என நம்பி வந்தனர். இந்த நிலையில் தற்சமயம் பேட்டி ஒன்றில் பேசிய ஜனகராஜ் நான் இதுவரை அமெரிக்காவிற்கு சென்றது கூட கிடையாது. அதற்கான விசாவை ஒரு முறை கூட நான் வாங்கியது கிடையாது. நான் இவ்வளவு காலமும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேன் எனக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை என்று கூறியுள்ளார்.

To Top